|
2.3 தர அடிப்படையிலான இதழ்கள்
இதழ்களில் வெளியாகும் செய்திகளின் அடிப்படையில்
இதழ்கள் பகுக்கப்படுகின்றன. இவற்றைத் தன்மை அடிப்படைப்
பகுப்பு (Quality) எனவும் கூறலாம். அவ்வகையில்
என வகைப்படுத்தலாம்.
இலக்கியம்,
கலை, அறிவியல் தொடர்பான ஆழமான
செய்திகளை வெளியிடும் ஆராய்ச்சி இதழ்களைத்
தரமான
இதழ்கள் என வரையறுக்கலாம்.
செய்திகள்,
கதை, கட்டுரை, திரைப்படம்
எனப்
பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இதழ்களை
மக்கள்
இதழ்கள் எனலாம். பரவலான செல்வாக்குப் பெற்ற இதழ்கள்
இவ்வகையினதாகும்.
படிப்பவரின் மனத்தைக் கெடுக்கும் பாலியல் மற்றும் வன்முறைச் செய்திகளைத் தூண்டுபவை நச்சு இதழ்கள் எனப்படும் (Yellow Magazines). இவ்வகையான இதழ்களை அரசாங்கம் பறிமுதல் செய்கிறது. எனினும் இரகசியமான முறையில் விற்பனையாகின்றன. எவ்வாறிருப்பினும், இவ்விதழ்கள் ஒழிக்கப்பட வேண்டியவை ஆகும்.
|