2.0 பாட முன்னுரை

    பெருகி வரும் தொழில் நுட்பம், அறிவியல் முன்னேற்றம் முதலியவற்றால் இதழ்கள் பெருக்கமடைந்துள்ளன. இதழ்களின் வரையறையை விளக்குவதாகப் பாடத்தின்     முதற்பகுதி அமைகின்றது. இதழ்கள் வெளியாகும் காலம் மற்றும் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. உள்ளடக்க அடிப்படையில் இதழ்கள் வேறுபடுத்தப்பட்டுச் சான்றுகளுடன் விளக்கப்படுகின்றன. இவையே இந்தப் பாடத்தில் குறிப்பிடப்படுபவை ஆகும்.