2.3 தர அடிப்படையிலான இதழ்கள்

 
    இதழ்களில் வெளியாகும் செய்திகளின் அடிப்படையில் இதழ்கள் பகுக்கப்படுகின்றன. இவற்றைத் தன்மை அடிப்படைப் பகுப்பு (Quality) எனவும் கூறலாம்.     அவ்வகையில்
 
(1)
தரமான இதழ்கள்
(2)
மக்கள் இதழ்கள்
(3)
நச்சு இதழ்கள் என வகைப்படுத்தலாம்.

  • தரமான இதழ்கள்

  •     இலக்கியம், கலை, அறிவியல் தொடர்பான ஆழமான செய்திகளை வெளியிடும் ஆராய்ச்சி இதழ்களைத் தரமான இதழ்கள் என வரையறுக்கலாம்.
     

    சான்று :

    கலைமகள், செந்தமிழ்ச்செல்வி, கிஸான் வோர்ல்ட்

  • மக்கள் இதழ்கள்

  •     செய்திகள், கதை, கட்டுரை, திரைப்படம் எனப் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இதழ்களை மக்கள் இதழ்கள் எனலாம். பரவலான செல்வாக்குப் பெற்ற இதழ்கள் இவ்வகையினதாகும்.
     

    சான்று:

    குமுதம், ஆனந்தவிகடன், குங்குமம், கல்கி

  • நச்சு இதழ்கள்


  •  

        படிப்பவரின் மனத்தைக் கெடுக்கும் பாலியல் மற்றும் வன்முறைச் செய்திகளைத் தூண்டுபவை நச்சுஇதழ்கள் எனப்படும் (Yellow Magazines). இவ்வகையான இதழ்களை அரசாங்கம் பறிமுதல் செய்கிறது. எனினும் இரகசியமான     முறையில் விற்பனையாகின்றன. எவ்வாறிருப்பினும், இவ்விதழ்கள் ஒழிக்கப்பட வேண்டியவை ஆகும்.

         தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1.

    இதழ்கள் எந்தெந்த அடிப்படையில் பகுத்து வகைப்படுத்தப் படுகின்றன?

    2.

    நாளிதழ் என்றால் என்ன ?

    3.

    நாளிதழ்கள் அச்சிடப்பெறும் தாளின் அளவு யாது?

    4.

    மக்கள் இதழ்களுக்குச் சான்று தந்து விளக்குக.

    5.

    தரமான இதழ்கள் என்றால் என்ன?