1.5 தொகுப்புரை 
      நண்பர்களே! 
  இதுவரை இதழியல் முதல் பாடத்தில் செய்தி என்பதன் விளக்கத்தினையும் வகைகளையும் அறிந்து கொண்டீர்கள். அதனை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திப் பாருங்கள்.  
  செய்தி என்பது வழக்கத்திற்கு மாறாகப் புதுமையாகத் தோன்றும் நிகழ்ச்சியாகும்.  
  செய்தியை     ஏந்திவரும் செய்தித்தாள்கள் சக்தி வாய்ந்தவை ஆகும். ஆக்கவும் அழிக்கவும் அவைகளால் முடியும்.  
  மனித ஆர்வமுடைய நிகழ்ச்சிகள் பெரும்பான்மைச் செய்தியாகிப் பத்திரிகைகளில் இடம் பெறுகின்றன. 
  ஒரு நிகழ்வு செய்தியாக ஆவதற்குப் புதுமை முதலிய இருபது அம்சங்கள் காரணமாக உள்ளன. 
  நேர அண்மை, இட அண்மை போன்ற 13 இயல்புகள் செய்திக்கு உள்ளன.  
  எதிர்பார்த்த செய்திகள், எதிர்பாராத செய்திகள், விளையாட்டுச் செய்திகள் என்பன போன்ற 11 முக்கிய வகைகளாகச் செய்திகள் வகைப்படுத்தப் பட்டுள்ளன. 
       விளையாட்டுச் செய்திகளில் மக்களுக்கு இன்றைய நாளில் அதிக ஆர்வம் இருக்கிறது. இது சாதனை புரிந்து வரும் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகம் ஏற்படுத்தும் செய்தியாக அமையும்.
  
 
 
 
 
 
 
  
   தன் மதிப்பீடு : வினாக்கள் - II     | 
  
 
 | 
  1.  | 
 
   செய்தியின் இயல்புகள் என்ன என்பதைக் கூறுக.
   | 
 
  விடை  | 
  
 
 | 
  2.  | 
 
  செய்தியின் முக்கிய வகைகளைக் குறிப்பிடுக. 
 | 
 விடை  | 
  
   | 
  
  
 |