| 2.0 பாட முன்னுரை
 
  சுதந்திர நாட்டின் மிகப் பெரிய காவலாளி என்று போற்றப்படுவது செய்தித்தாளாகும். அப்படிப்பட்ட நாளேட்டின்     நாடி     நரம்புகளாக விளங்குபவர்கள் செய்தியாளர்கள். பொதுமக்கள்     அடிக்கடி 
   பார்க்கக் கூடியவர்கள் செய்தியாளர்கள். பொது இடங்களில் இவர்களுக்கு மரியாதையும் தனி இடமும் உண்டு. சில நேரங்களில் மக்களின் கோபத்திற்கும், 
 தாக்குதலுக்கும் ஆளாக     வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். இத்தகைய சமூகத் தொடர்பும் ஈடுபாடும் உடைய நிருபர்களுடைய தகுதிகள், பொறுப்புகள், கடமைகள் ஆகியவை பற்றிய செய்திகள் இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.  
  |