4.0 பாட முன்னுரை
ஒரு பெரிய, நாடு
தழுவிய நாளிதழின் ஆசிரியர் பணி என்பது மிகவும் பெருமைக்கு உரிய பொறுப்பான
பணியாகும். எல்லாருக்கும் இந்த வாய்ப்பு எளிதில் கிட்டுவதில்லை. ஒவ்வொரு
நாளிதழும் அதன் இறுதியில், அதனுடைய வெளியீட்டாளர், அச்சிடுபவர் பெயரோடு
ஆசிரியர் பெயரையும் சேர்த்து வெளியிட வேண்டும் என்று செய்தித்தாள் பதிவுச்
சட்டம் கூறுகின்றது. அத்தகைய பொறுப்பு வாய்ந்த ஆசிரியர் மற்றும் துணை
ஆசிரியர்களின் தகுதிகள், கடமைகள், பொறுப்புகள் ஆகியவற்றைப் பற்றிய செய்திகள் இப்பாடத்தில்
தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
|