தமிழில் வெளியாகும் இதழ்கள், அவற்றின் வருகை,
பெயர்,
நடத்துபவர், சமயம், அரசியல் முதலியவற்றைச் சார்ந்து அதன்
அமைப்பும் உள்ளடக்கமும் பெறுகின்றன. எனவே
இதழ்களைப் பலவகையாகப் பிரித்து அவற்றின் அமைப்பும்
உள்ளடக்கமும் அறியப்பட்டன. அவ்வகையில் நாளிதழ்களின் அமைப்பு,
உள்ளடக்கம்,
வெகுசன இதழ்களின் அமைப்பு, உள்ளடக்கம், சிற்றிதழ்களின்
அமைப்பு, உள்ளடக்கம் முதலியனவும் அறியப்பட்டன. முடிவாக இதழ்களின் பெயர்களும் (தலைப்பும்)
நடத்துபவர்களின் கொள்கையும், அவை சென்றடையும்
மக்களின் எண்ணிக்கை, இதழ்களின் எண்ணிக்கை
முதலியனவும்  இதழ்களின் அமைப்பினையும்
உள்ளடக்கத்தையும் தீர்மானிக்கின்றன என்பதையும்
அறிந்தோம்.
|