இதழ்கள் தத்தம் கொள்கைகளுக்கும் நோக்கத்திற்கும் ஏற்பத் தலையங்கங்களை அமைத்துக் கொள்கின்றன. வெகுசன இதழ்களில் தலையங்கச் செய்தியும் சரி, அதன் நடையும் சரி, படிப்பவர் அனைவர்க்கும் புரியும் நிலையிலே அமையும். தலையங்கச் செய்தி தலையங்கம் என்ற பெயருடன் வருவதோடு இன்னும் வேறு பெயர்களிலும் வரும். இன்றும் சில இதழ்களில் ஏதேனும் ஒரு குறியீடு தலையங்கத்தை அடையாளப்படுத்தும். சான்றாக ஆனந்த விகடன் இதழில் தலையங்கம் பகுதி அவ்விதழின் சின்னமாகிய தலை உருவத்தைக் கொண்டதாக அமையும். மேலும் ஆனந்த விகடன் இதழில் இடம்பெறும் தலையங்கத்தின் இன்னொரு சிறப்பு, தலையங்கத்தில் இடம்பெறும் செய்தியை விளக்கும் நிலையில் கருத்துப்படங்களும் அருகில் இடம் பெறுவதாகும். அந்தந்த வாரத்தில் பரவலாகப் பேசப்படும் அரசியல், திரைப்படம், பொதுவான சிக்கல்கள் குறித்த கருத்தும், கருத்து விளக்கப் படங்களும் இணைந்து ஆனந்த விகடன் இதழின் தலையங்கமாக அமைகிறது.
பெரும்பாலான இதழ்களில் தலையங்கம் இடம்பெறும். ஆனால் ஆசிரியரின் பெயர் குறிப்பிடப்படாது. தலைப்பு குறியீடாகவோ, தலையங்கம் என்ற பெயரிலோ அமையும். ஆனால் இந்தியா டுடே இதழில் தலையங்கம் ஆசிரியரின் பெயருடன் அமைவது குறிப்பிடத்தக்கதாகும். இந்திய அளவிலான மிகச் சிறந்த இதழ்களில் ஒன்றாக வரும் 'இந்தியா டுடே'வின் ஆசிரியரால் வெளியிடப்படும் தலையங்கம் தனிச் சிறப்பு உடையதாக அமைகிறது. 'இந்தியா டுடே'வில் இடம் பெறும் தலையங்கம் ‘ஆசிரியரிடம் இருந்து’ என்ற தலைப்புடனும் முடியும் இடத்தில் ஆசிரியர் பெயருடனும் இடம் பெறுகிறது. 'இந்தியா டுடே'வின் தலையங்கம்
பெரும்பாலும் முந்தைய இதழ்களின் விமர்சனம் குறித்த கருத்துக் கணிப்பாகவே அமைகிறது.
ஒவ்வொரு இதழும் அதற்கு முன்பு வந்த இதழின் தன்மை குறித்த மதிப்பீடாகவும் அமைகிறது. |
1. |
|
||
2. |
|
||
3. |
|
||
4. |
|
||
5. |
|