இதழ்களின் உள்ளடக்கப் பகுதிகளில்
கருத்துப் படங்கள் - கேலிச் சித்திரங்கள், நிழற்படங்கள், வரைபடங்கள்
போன்ற படங்களுடன் இடம்பெறும் செய்திகளைப் பற்றி இப்பாடத்தில்
விளக்கமுறக் காணலாம்.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இதழ்களில் படங்கள் பெறுகின்ற இடம்
பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
படங்களின் பயன்களைத் தெரிந்து கொள்ளலாம்.
‘கருத்துப் படங்கள்’ இதழ்களில் முக்கியப்
பணிகள் ஆற்றுகின்றன என்பதனைத் தெரிந்து கொள்ளலாம்.
படத் துணுக்குகள் என்றால் என்ன, அவற்றின்
பணி யாது என அறியலாம்.
நகைச்சுவைத் துணுக்குகளைப் பற்றியும்
அவற்றின் முக்கியத்துவம் பற்றியும் அறியலாம்.
நிழற்படங்கள் மட்டுமல்லாமல், ஓவியங்கள்
பெறும் இடம் பற்றியும் அறியலாம்.
இக்கலையில் சிறந்தோர் பணியும் திறனும்
பற்றியும் அறிந்து கொள்ளலாம்.