|
இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும் போது கீழ்க்காணும் திறன்களையும்
பயன்களையும் பெறமுடியும்.
- துணுக்குகள் என்றால் என்ன என்பதை அறிய முடியும்.
- துணுக்குகளின் வகைகள் பற்றி அறியலாம்.
-
துணுக்குகள் புதிய கருத்து அடிப்படையில் நிறைய
வருகின்றன என்று அறிய முடியும்.
-
துணுக்குகள் நகைச்சுவைத் தன்மை சார்ந்தவை
என்று அறியலாம்.
-
துணுக்குகள் - அரசியல், பொருளியல், சமூகம், அன்றாட நடைமுறைகள், திரைப்படம்,
தகவல் தொடர்புகள், சிந்தனைத் தூண்டல்கள்
முதலிய பலவற்றையும் தழுவிச் செல்வதை உணரமுடியும்.
-
துணுக்குகளில் இழையோடும் நகைச்சுவையின்
தன்மைகள் மக்களை ஈர்க்கின்றன
என்பதைப் புரிந்து
கொள்ளலாம்.
-
துணுக்குகளின் கதைத் தன்மைகள், படங்கள் முதலியவற்றின் பயன்பாடுகள் பற்றியும்
இவற்றின் நன்மை, தீமைகள் பற்றியும் அறிந்து கொள்ள முடியும்.
- துணுக்குத் தோரணம் என்றால் என்ன என்று அறிய
முடியும்.
|