விளம்பரங்கள், விற்பனையைப் பெருக்குவதற்காகவும், புகழ், பெயர், மக்கள் நன்மை, நுகர்வோர் நலன் போன்ற பல காரணங்களுக்காகவும் இதழ்களில் வெளியாகின்றன. அந்தந்த நேரத்திற்கேற்பப் பலதரப்பட்ட வயதினரையும் கவரும் வகையில் விளம்பரங்கள் வருகின்றன. நுகர்வோர் யார் என்பதையும் மனத்திற்கொண்டே விளம்பர உத்தியும் நடையும் பயன்படுத்தப்படுகின்றன. விளம்பரங்கள், தகவல்களைப் பொதுவாக ஆணித்தரமாக அழுத்திச் சொல்வதை ஓர் உத்தியாகக் கையாள்கின்றன. எடுத்துக்காட்டு:
சில விளம்பரங்கள் பொதுவாகச் சில வார்த்தைகளில் சுருக்கமாக அமையும். எடுத்துக்காட்டு:
விளம்பரங்கள் சில சமயங்களில் முரண்தொடை உத்தியைக் கையாளுகின்றன.
விளம்பரங்கள் பொதுவாக, தொடர்புள்ள சொல், கருத்து ஆகியவற்றைக் கொண்டு வருகின்றன. இனிய சுவை உதயம், புதிய சன்ரைஸ் இவ்வாறு, விளம்பரங்கள் நுகர்வோரை வரையறைப்படுத்தி வெளியாகின்றன.
குழந்தைகள் பயன்படுத்தும் பொருட்களுக்கான விளம்பரங்கள் தாய்மார்களைக் கவரும் வகையில் உள்ளன. எடுத்துக்காட்டு:
பெரியவர்கள் பயன்படுத்தும் பொருள் குழந்தையை வைத்து விளம்பரப்படுத்தப் படுகின்றது. எடுத்துக்காட்டு: ஹூடி பாபா
சில பொருட்கள் தாய்நாட்டுப்பற்று அடிப்படையில் விளம்பர உத்தி கொண்டுள்ளன. எடுத்துக்காட்டு:
என்று ஜப்பானியர் சொல்வதாக அமைவது.
இதுபோல் எத்தனையோ உத்திகள், நடைகள், விளம்பரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. |