6.6 விளம்பரங்களும் சமூகமும்

இது தகவல் ஊழிக் காலம். தகவல் என்பதே விளம்பரம் என்னும் தடத்தில் உலகம் இயங்குகிறது. விளம்பரம் இல்லாமல் உலகம் இயங்காது. இது குறித்து இப்போது பார்க்கலாம்.

திரைப்பட விளம்பரங்கள்

தினமணி, தினத்தந்தி, தினகரன் முதலான இதழ்களிலும், குங்குமம், குமுதம், ஆனந்த விகடன் முதலான இதழ்களிலும் எந்தத் திரையரங்கில் என்ன படம் ஓடுகிறது என்பதும், இனி வர இருக்கும் படம் பற்றிய விளம்பரங்களும் திரைப்படம் குறித்த விளம்பரங்களாக அமைகின்றன. பலராலும் இவை வரவேற்கப்படுகின்றன.

தேவைக்குரிய விளம்பரங்கள்

மணமகன், மணமகள் தேவை குறித்த விளம்பரம், சித்த மருத்துவம் குறித்த விளம்பரம், உடல் எடை கூட, குறைய செய்யும் யோகா குறித்த விளம்பரம், டெண்டர், ஏல அறிவிப்பு விளம்பரம், திருமண விளம்பரம், மரண அறிவிப்பு, காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு.

கல்வி விளம்பரங்கள்

The Hindu, தினத்தந்தி, எம்ப்ளாய்மெண்ட் நியூஸ், Free Ad.. முதலியன வேலை தேடுவோர்களுக்கும், கல்வி கற்க விரும்புவோருக்கும் பல நிலைகளில் உதவுகின்றன.

மாணவர் மலர், இளைஞர் மலர் முதலியன மாணவர்களின் கல்வி சார்ந்து புதிய புதிய கல்வியையும் அதன் தொடர்பான கல்லூரிகள் முதலானவற்றையும் விளக்குவனவாக அமைகின்றன.

அந்தந்த விளம்பரதாரர்கள் தரும் பணத்திற்கேற்ப இதழ்களில், விளம்பரங்கள் இடம்பெறுகின்றன.