6.8 தொகுப்புரை

இதழ்களில் விளம்பரங்கள் என்ற பாடம், விளம்பரங்களினால் இதழ்களும், நுகர்வோரும் அடையும் நன்மைகள், விளம்பரங்களின் வளர்ச்சி, விளம்பரங்களின் கவர்ச்சி, விளம்பர நிறுவனங்கள், விளம்பர உத்திகள், விளம்பர நடை இவைபோன்ற பலவற்றையும் பற்றி விளக்கியுள்ளது.

மேலும் இதழ்களிலும் தொலைக்காட்சியிலும் இடம்பெறும் விளம்பரங்களின் ஒற்றுமை, விளம்பரங்களின் இன்றைய நிலை, நன்மை, தீமைகள் முதலியனவும், விளம்பரங்கள் மக்களை எவ்வாறு மூளைச் சலவை செய்து உலகமயமாக்கத்தில் ஈடுபடச் செய்கின்றன என்பதும், இதழ்கள் நடத்துவதற்கு விளம்பரங்களின் பங்கு அவசியம் என்பதும், சமூகவியல் பார்வையோடு விளக்கப்பட்டமை கண்டோம்.

 

தன் மதிப்பீடு : வினாக்கள் II

1.

விளம்பரங்களே இதழை நடத்துவதற்கு உதவுகின்றனவா?

2.

இதழ்களின் வகைக்கேற்ப விளம்பரங்கள் இடம் பெறுகின்றனவா?

3.

விளம்பரப் பகுப்புகள் யாவை?

4.

விளம்பரங்களால் நன்மை, தீமைகள் ஏற்படுகின்றன என்பதை ஏற்கலாமா?

5.

விளம்பரத்தின் வழி மாணவர் நன்மை அடைகின்றனர் என்பதை ஏற்கலாமா?

6.

தொலைக்காட்சியில் இடம்பெறும் விளம்பரத்தின் சாயல்கள் இதழ்களிலும் இடம் பெறுகின்றனவா?

7.

இதழ்களில் திரைப்பட விளம்பரம் அனைவராலும் வரவேற்கப் படுகின்றதா?

8.

உடல்நலம் காக்கச் சில விளம்பரங்கள் உதவுகின்றனவா?

9.

விளம்பரமே இல்லாத சில இதழ்களின் பெயர்களை எழுதுக.

10.

ஒரு இதழின் விற்பனை, தரம் இவற்றை நிர்ணயிப்பது விளம்பரமா?