2.0 பாட முன்னுரை
இதழியல் பணியில் மிகவும் சிறப்பிடம் பெறுவது செம்மையாக்கமாகும். பத்திரிகையின் (நாளிதழ், பருவ இதழ்கள் அனைத்தையும் சேர்த்துப் ‘பத்திரிகைகள்’ என்றே கூறலாம்.) இறுதி வடிவமே வாசகரைச் சென்றடைகிறது. அதனால் செய்திகளைச் செம்மைப்படுத்த அதிகக் கவனம் செலுத்த வேண்டும். உலகின் நான்கு பக்கங்களிலிருந்தும் (North, East, West, South = NEWS) பத்திரிகை அலுவலகத்திற்குப் பல்வேறு செய்திகள் வருகின்றன.
அவற்றை வகைதொகைப்படுத்தி வாசகர்கள் விரும்பும் வகையில் பத்திரிகையை வெளியிடுவதே செம்மையாக்கம் (Editing) என்பதாகும். செம்மையாக்கம் செய்பவர் ஒரு
பத்திரிகையின் ஆசிரியராகவோ (Editor) அல்லது துணை ஆசிரியராகவோ (Sub-editor) இருப்பார். சில பத்திரிகைகளின் ஆசிரியரே உரிமையாளராகவும் இருப்பார். பத்திரிகையின் உரிமையாளரே ஆசிரியராக இருந்தால் செம்மையாக்கப் பணியை அவரது நம்பிக்கையைப் பெற்ற ஒரு துணையாசிரியர் செய்வார்.
|