4.0 பாட முன்னுரை
நம் நாடு விடுதலை பெற்ற பிறகு பல துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்து வருகிறது. அப்படிப்பட்ட ஒரு துறையாகச் செய்தித்தாள்கள், வார, மாத இதழ்கள் வெளியீட்டுத்துறை திகழ்கின்றது, உருவத்திலும் உள்ளடக்கத்திலும் இன்று இதழ்கள் முன்னேற்றம் அடைந்துள்ளன. நாடு விடுதலை பெற்ற பொழுது ஒரு சில இதழ்களே வெளிவந்தன. அவற்றுள் தினமணி, தினத்தந்தி, சுதேசமித்திரன், கல்கி, குமுதம், ஆனந்த விகடன், கலைமகள், கணையாழி, அமுதசுரபி போன்றவை மிகவும் குறிப்பிடத்தக்கவை. காலச்சுவடு, செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி போன்ற இலக்கிய இதழ்களும் ஒரு சில குறிப்பிட்ட வாசகர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கில் வெளியிடப்படுகின்றன.
புதுதில்லி, மகாராஷ்டிரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் இதழ்களின் வெளியீட்டில் இந்திய அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன.
|