| 2.3 எழுத்துப் படிகளின் வகைகள் 
     பத்திரிகை     அலுவலகத்திற்கு     வருகின்ற எழுத்துப்படிகளைக் கீழ்க் காணுமாறு மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவை:- 
 
 | 1)  | 
 
  செய்தியாளர்கள் சேகரித்து அனுப்பும் செய்திகள். 
   | 
  
 
 | 2)  | 
 
  செய்தி நிறுவனங்கள் அனுப்பும் செய்திகள் 
   | 
  
 
 | 3)  | 
 
  சிறப்புக் கூறுகள் (Features), கட்டுரைகள் (Articles) 
   | 
  
  
என்பவையாகும்.     மேற்கண்ட     மூன்றனுள் செய்தியாளர்களிடமிருந்து     பெறும்     செய்திகளைச் செப்பனிடுதல்தான் கடுமையான பணியாகும். செய்தியாளர்கள் அவர்களது நோக்கில் செய்திகளைச் செம்மைப்படுத்துபவர் செய்தித்தாளின் வெளியீட்டு நோக்கில் செய்திகளைக் குறைத்து, நீக்கி, விளக்கி, மாற்றி வெளியிட வேண்டும். 
    செய்தி நிறுவனங்கள் அனுப்பும் செய்திகள் ஓரளவு செய்தியின் வடிவத்தில்     இருக்கும்.     அச்செய்தியின் முன்வரலாறு, செய்தி இதழுக்குத் தெரியுமாதலால் அதுபற்றிய விவரம் இடம்பெறாது. அதனை ஒவ்வோர் இதழும் தங்கள் பாணியில் சேர்த்துக்கொள்வது வழக்கம். மேலும், செய்தி நிறுவனம் தரும் செய்திகள் ஆங்கில மொழியிலேயே இருக்கும். வட்டார மொழி இதழ்கள் அவற்றைத் தங்கள் மொழியில் மொழிபெயர்த்துத்     தங்களுக்கே     உரிய மொழிநடையில் அமைத்துக்கொள்ள வேண்டும். 
    சிறப்புக்கூறுகள்,     கட்டுரைகள்     போன்றவற்றைத் துணையாசிரியர் அல்லது சுதந்திர எழுத்தாளர் (Free-lance Writers) எழுதுவர். இவற்றுள் சட்டச் சிக்கல் போன்ற குறைகள் நேர்வதற்கு வாய்ப்பில்லை. 
 |