பாடம் 4

P20444 - இதழ்களின் வகைமையும்
    குறியீடுகளின் பயன்பாடும்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இக்கால இதழ்களின் வளர்ச்சி, வகைகள், நிலைப்பாடு,
வாசகர்களின் விருப்பம் பற்றிய செய்திகள் இப்பாடத்தில்
விளக்கப்படுகின்றன. இதழ்களில் காணப்படுகின்ற பிழைகள்,
பயன்படுத்துகின்ற     செம்மையாக்கக்     குறியீடுகளின்
பயன்பாடுகள் ஆகியன     பற்றியும்     இப்பாடத்தில்
எடுத்துரைக்கப்படுகின்றது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால்
என்ன பயன் பெறலாம்?

    இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள்
கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறலாம்.

நம் நாடு விடுதலையாவதற்கு முன்னும் பின்னும்
இதழ்களின் உள்ளடக்கம் எவ்வாறு இருந்தது என்பதை
அறியலாம்.
இதழ்களின் விற்பனையைப் பொறுத்தே பெரிய இதழ்கள்,
நடுத்தர இதழ்கள், சிறிய இதழ்கள்     என்று
வகைப்படுத்தப்     படுகின்றன     என்பதைப்
புரிந்துகொள்ளலாம்.
புலனாய்வு இதழ்களின் போக்குகள் பற்றி உணரலாம்.
ஒற்றுப் பிழைகள்     களையப்பட வேண்டியதன்
இன்றியமையாமையைப் புரிந்துகொள்ளலாம்.
கேள்விக்குறி, ஆச்சரியக்குறி, கால்புள்ளி, அரைப்புள்ளி
போன்ற செம்மையாக்கக் குறியீடுகள் இதழ்களில்
எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன, அவற்றின் பயன்பாடு
என்ன என்பதைத் தெளியலாம்.