3. சூடான உணவை அருந்துவதற்குத் தலைவி ஏன்
தயங்குகிறாள்?

தன் தலைவன், தனது நெஞ்சினுள் வாழ்கின்றான். எனவே, சூடான
உணவை உண்டால், அது தன் நெஞ்சினுள் இருக்கும் தன்
தலைவனைப் பாதித்து விடுமோ என்று அஞ்சுகிறாள் தலைவி.
அதனால் சூடான உணவை அருந்துவதற்குகூடத் தயங்குகிறாள்.