1. தலைவனைப் பார்க்க வேண்டும் என்ற தன் ஆசையைத்
தலைவி எவ்வாறு வெளியிடுகிறாள்?

தன் நெஞ்சைப் பார்த்துத் தலைவி, நெஞ்சே! நினைத்த உடனேயே
தலைவனிடம் செல்கிறாய். இந்த வாய்ப்பு என் கண்களுக்கு இல்லை.
தலைவனைப் பார்க்கும் ஆசையினால் என் கண்கள் என்னைத்
துன்புறுத்துகின்றன. எனவே, நீயே அவற்றை அழைத்துச் செல்
என்று கூறுகிறாள்.