6. தலைவனின் பிரிவைத் தான் தாங்கிக் கொள்ள இயலாது
என்பதனைத் தலைவி எவ்வாறு வெளிப்படுத்துகிறாள்?

பிரிந்து செல்லவிருக்கும் தலைவன் தலைவியிடம் விடைபெற
வருகிறான். தலைவனின் பிரிவைத் தாங்கிக் கொள்ள இயலாத
தலைவி, தலைவனைப் பார்த்து ‘என்னைப் பிரிந்து சென்று மீண்டும்
நீ திரும்பி வருவது வரையிலும் நான் உயிரோடு இருக்கமாட்டேன்.
எனவே, என்னை விட்டுப் பிரிந்து செல்லாமல் இருந்தால் பேசு.
இல்லாவிட்டால் நீ திரும்பி     வரும்பொழுது உயிரோடு
இருப்பவர்களிடம் பேசு’ என்று, தலைவனின் பிரிவைத் தான்
தாங்கிக் கொள்ள இயலாது என்பதைச் சுட்டிக் காட்டுகிறாள்.