| 6.2 நிலங்கள் | ||||||||||||||||||||||||||
|
வளோண்மைக்குப் பயன்படும் நிலத்தைப்
பூமி, செய், செறு, நிலங்களுக்குப் பெயர்கள் வைத்திருந்தார்கள்.
. `கொற்றன் |
||||||||||||||||||||||||||
| • உடைமை மாறுதல் | ||||||||||||||||||||||||||
| ஒருவருக்கு
உரிமையான நிலம் அடுத்தவருக்கு விலைக்கு விற்கப்படும் பொழுது, அதன் உடைமையாளர் மாறும்போது, பெரும்பாலும் அந்நிலத்தின் பெயரும் மாற்றமடையும். `பண்டுடையாரையும் பழம்பேரையும் தவிர்த்து' நிலம் வாங்கப்பட்டதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன. |
||||||||||||||||||||||||||
| • விளைநிலம் | ||||||||||||||||||||||||||
| கமுகந்தோட்டம், மாந்தோட்டம்,
மஞ்சள் விளையும் பூமி, எள்ளு விளையும் பூமி, வழுதிலை கருணை விளையும் பூமி போன்ற விளை பொருள்களால் நிலம் சில கல்வெட்டுகளால் குறிக்கப்படுகின்றன. வழுதிலை அல்லது வழுதுணங்காய் என்பது கத்தரிக்காயைக் குறிக்கும். கருணை என்பது ஒரு கிழங்கு வகை. |
||||||||||||||||||||||||||
| 6.2.1 நிலம் அளத்தலும் வரிமுறையும் | ||||||||||||||||||||||||||
| நாட்டில் பயிரிடும் வளோண்மை
நிலம் எவ்வளவு என்று தெரிந்தால்தான் விளைநிலம் எவ்வளவு, அதனால் வரும் வருவாய் காணிக்கடன் எவ்வளவு என்று திட்டவட்டமாகத் தெரியும். அதனால் முதலாம் இராசராசன் (1001), முதல் குலோத்துங்கன் (1086), மூன்றாம் குலோத்துங்கன் (1216) ஆகியோர் காலங்களில் சோழ நாட்டில் நிலம் அளக்கப்பட்டது. |
||||||||||||||||||||||||||
| • நிலம் அளத்தல் | ||||||||||||||||||||||||||
| நில அளவு செய்த
அலுவலர்கள் குரவன் உலகளந்தான் இராசராச மாராயன், உலகு அளவித்த திருவடிகள் சாத்தன், உலகளந்த சோழப் பல்லவரையன், குளத்தூருடையான் உலகளந்தான் ஆன திருவரங்க தேவன் ஆகியோர் ஆவர். அளவு செய்த கோல்கள் `திருவுலகு அளந்த ஸ்ரீபாதக்கோல்', `உலகளந்த கோல்' எனப்பட்டது. இதன்மூலம் விளைநிலம் மிகச் சரியாகக் கணக்கிடப்பட்டது. ஊரின் மற்ற பகுதிகளும் அளந்து குறிக்கப்பட்டன. |
||||||||||||||||||||||||||
| • வரிமுறை | ||||||||||||||||||||||||||
|
நிலம் `தரம்' வாரியாகப் பிரிக்கப்பட்டது. அவை 12
வரை புது ஊர் ஏற்படுத்தி உழவர்களைக் குடியேற்றினால்
முதல் |
||||||||||||||||||||||||||
| 6.2.2 பயிரிடலும் விளைச்சலும் | ||||||||||||||||||||||||||
| நில உடைமையாளர்கள் தாங்களாகவே
பயிர் செய்யலாம். அல்லது பிறரைக் கொண்டு பயிர் செய்விக்கலாம். அவர்கள் உழுதுண்போர், உழுவித்துண்போர் எனப்பட்டனர். கல்வெட்டுகளில் `பயிர்செய்தும் செய்வித்தும்' `நிலம் உழுதும் உழுவித்தும்' என்றும் குறிக்கப்படுகின்றன. பயிரிடும் உரிமையைக் `காராண்மை' என்றும், நில உரிமையை `மீனாட்சி' என்றும் குறித்தனர். |
||||||||||||||||||||||||||
| • நிலம் திருத்துதல் | ||||||||||||||||||||||||||
|
பயிர் செய்யத் தகுதியற்ற நிலங்களைப் பயிர்நிலமாக
மாற்றும் `பிரம்ம தேசத்துப் புறக்காலில் காடுவெட்டிப்
பயிர் செய்ய |
||||||||||||||||||||||||||
|
(ஒண்ணாது -இயலாது, ஒக்க -சமமாக). வெள்ளப் பெருக்கால் அழிந்த
நிலங்களையும் சரி `ஆற்றுப் படுகையில் ஆறு
உடைந்து மணலிட்டு `காவேரி உடைந்து மடுவாய்
நீர்நிலை ஆன நிலம்' (மடு - பள்ளம்). |
||||||||||||||||||||||||||
| • இருவகைப் பயிர்கள் | ||||||||||||||||||||||||||
| பயிர்கள் வான் பயிர்,
புன்பயிர் என்று இரண்டு வகையாக அழைக்கப்பட்டன. நெல், கரும்பு, வாழை, தெங்கு, கமுகு, மா, பலா, மஞ்சள், செங்கழுநீர், கொழுந்து ஆகியவை வான் பயிர்கள். மானவாரி, புழுதிநெல், எள், வரகு, பருத்தி, ஆமணக்கு ஆகியவை புன்பயிர் எனப்பட்டன. வான்பயிருக்கு வரி அதிகமாகவும், புன்பயிருக்கு வரி குறைவாகவும் விதிக்கப்பட்டது. |
||||||||||||||||||||||||||
| • விளைச்சல்கள் | ||||||||||||||||||||||||||
| ஒரு போகம் விளைவு
பூ எனப்பட்டது. இது, முதற்பூ, இடைப்பூ, கடைப்பூ என அழைக்கப்பட்டது. புதியதாகப் பயிர் செய்தால் வம்பு எனப்பட்டது. பருவத்திற்கு ஏற்ப, குறுவை, சம்பா, கார், பசானம், தாளடி, மறு, கார்மறு என அவை அழைக்கப்பட்டன. |
||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||