தமிழகத்தில் தோன்றிய ஓவியங்களில் காலத்தால்
முந்திய ஓவியங்களான பாறை ஓவியங்களைப் பற்றி இந்தப்
பாடம் எடுத்துக் கூறுகின்றது. பாறை ஓவியங்கள்
காணப்படும் இடங்கள், அவற்றின் காலம், அவற்றின்
வகைகள், அவை உணர்த்தும் வரலாற்று உண்மைகள்
ஆகியன இப்பாடத்தில் விளக்கப்படுகின்றன.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
தமிழகத்தில் மிகப் பழங்கால மனித வரலாற்று
ஆவணங்களில் ஒன்றாகப் பாறை ஓவியங்கள்
அமைந்துள்ளன எனும் உண்மையை உணரலாம்.
பாறை ஓவியங்களின் வகைகளைப் பற்றி அறிந்து
கொள்ளலாம்.
பாறை ஓவியங்களின் அமைப்பு முறை, வண்ணப் பூச்சு
முறை முதலியவற்றை அறியலாம். அவைகளின்
காலத்தை அறிய அந்த ஓவியங்கள் துணை செய்யும்
விதம் பற்றியும் அறியலாம்.