- முற்காலப் பாண்டியர், பல்லவரது குடைவரை மரபைப்
பின்பற்றியும் அவற்றில்
சிற்சில மாற்றங்கள் செய்தும்
அமைத்த குடைவரைச் சிற்பங்கள் பற்றி அறியலாம்.
பல்லவர்க்கு முன்பே பிள்ளையார் பட்டியில்
பாண்டியர் அமைத்த குடைவரை பற்றியும்,
விநாயகர்
சிற்பம் பற்றியும் அறியலாம்.
- முற்காலப் பாண்டியர் காலத்தில் வரையப்பட்ட
ஓவியங்கள் பற்றித் தெரிந்து
கொள்ளலாம்.
- கட்டட வகைச் சிற்பம் எனக் கொள்ளப்படும்
கழுகுமலை வெட்டுவான் கோயிலில் காணப்படும்
சிற்பங்கள் பற்றித் தெரியலாம்.
- முற்காலப் பாண்டியரின் கட்டுமானக் கோயில்களில்
அழிந்தவை போக எஞ்சிய ஒரு சில கோயில்
சிற்பங்களை அறியலாம்.
- பிற்காலப் பாண்டியரும் கோயில்கள், கோபுரங்கள்,
மண்டபங்கள் கட்டுவதில் ஆர்வம் காட்டியதை
அறியலாம்.
- பாண்டியர் கால ஓவியங்கள் பற்றித் தெரிந்து
கொள்ளலாம்.
|
|