பாடம் - 4

A06124 சோழர் கால ஓவியங்களும்
சிற்பங்களும்

E

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

சிற்பக் கலையின் பொற்காலம் எனக் கருதப்படுவது
சோழர் காலம்.

இப்பாடம் சோழர் காலச் சிற்பக் கலையை, முற்காலச்
சோழர் சிற்பங்கள், பிற்காலச் சோழர் சிற்பங்கள் என இரு
பிரிவுகளாகப் பிரித்து விளக்குகிறது.

சோழர் காலத்து ஓவியங்களில் எஞ்சியுள்ள ஒரே ஓர்
ஓவியமான தஞ்சைப் பெரிய கோயில் ஓவியத் தொகுதி
பற்றி விரிவாக விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • சோழர் சிற்பங்களின் பொதுவான இலக்கணத்தினை
    அறியலாம்.
  • பல்லவர்     மற்றும்     முற்காலப் பாண்டியரது
    சிற்பங்களினின்றும் சோழர் காலச் சிற்பங்கள்
    எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை அறிந்து
    கொள்ளலாம்.
  • முற்காலச் சோழர் படைத்த சிற்பங்கள் எவை
    என்பதையும், எத்தகைய சிற்பங்களைப் படைப்பதில்
    ஆர்வம் காட்டினர் என்பதையும் காணலாம்.
  • பிற்காலச் சோழர் காலத்தில் எத்தகைய சிற்பங்களுக்கு
    முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்பதும், அவர்கள்
    படைத்த சிற்பங்கள் பற்றியும் அறிந்து தெளியலாம்.
  • சிற்பங்களை நன்றாகப் படைத்த சோழர்கள் ஓவியக்
    கலையில் ஆர்வம் காட்டாதது பற்றியும், அவர்கள்
    காலத்து ஓவியமான தஞ்சைப் பெரிய கோயில்
    ஓவியத்தைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

பாட அமைப்பு