பாடம் - 5

A06125 விசயநகர-நாயக்கர் கால
ஓவியங்களும் சிற்பங்களும்

E

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

தமிழகக் கோயில் கலை வரலாற்றில் விசயநகர-நாயக்கர்
சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் பெறும் இடம் என்ன
என்பது பற்றி விளக்குகிறது. நாயக்கர்கள் புதிதாகக் கட்டிய
கோயில்களிலும், புதுப்பித்த கோயில்களிலும் உள்ள
சிறப்பான சிற்பங்கள் பற்றி இப்பாடம் விளக்குகிறது.
நாயக்கர் கால ஓவியங்கள் பற்றிய செய்திகளைத்
தருகின்றது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • தமிழகத்தில் விசயநகர-நாயக்கர் படைத்த சிற்பங்கள்
    இடம் பெற்றுள்ள கோயில்களைத் தெரிந்து
    கொள்ளலாம்.
  • புராணங்கள், இதிகாசங்கள், நாட்டுப்புறக் கதைகள்
    போன்றவற்றை அடிப்படையாகக்     கொண்டு
    அமைக்கப்பட்ட சிற்பங்களை அறியலாம்.
  • நாயக்கர்களுக்கே உரித்தான சிற்பக் கலைப்
    பாணியைப் புரிந்து கொள்ளலாம்.
  • நாயக்கர் காலத்தில் கோயில்களில் இடம்பெற்ற
    ஓவியங்கள், அவற்றில் அழிந்தவை போக
    எஞ்சியிருக்கும் ஓவியங்கள், மீண்டும் வரையப்பட்ட
    ஓவியங்கள், நாயக்கர் ஓவியப் பாணி ஆகியவற்றை
    அறிந்து கொள்ளலாம்.

பாட அமைப்பு