4.0 பாட முன்னுரை

தமிழ் நாடகம் இன்றைய நிலையை அடைய பல
படிநிலைகளைக் கடந்து     வந்துள்ளது. பத்தொன்பதாம்
நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் நாடகம் நலிவுற்று இருந்தது.
தமிழ் நாடகம் வடிவமைப்பிலும், படைப்பு நிலைமையிலும் தரம்
தாழ்ந்து விளங்கியது. இதனால் மேல்தட்டு மக்கள் தமிழ் நாடக
மேடையை வெறுக்கும் நிலை ஏற்படலாயிற்று. இந்நிலையை
மாற்றி, தமிழ்நாடகக் கலைக்குப் பொலிவும் சிறப்பும்
சேர்த்தோரில் குறிப்பிடத்தக்கவர்கள் பம்மல் சம்பந்த முதலியார்
அவர்களும் சங்கரதாசு சுவாமிகளும் ஆவர். இவர்களிருவருமே
தமிழ் நாடக முன்னோடிகளாக இப்பாடப் பகுதியில் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளனர்.