பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ் நாடக மேடை
தமிழ் நாடக மேடை அடைந்த வீழ்ச்சிக்கான காரணங்களை
தமிழ் நாடக முன்னோடிகளாகத் திகழ்ந்த சம்பந்த சம்பந்த முதலியாரின் பயின்முறை நாடகக் குழுமுறையும், சங்கரதாசு சுவாமிகளின் தொழில் முறை நாடகக் குழு முறையும் தமிழ் நாடக மேடையில் இருவகை நாடகக் குழுமுறையின் செயல்பாட்டுக்கு அடித்தளம் வகுத்தன. தமிழகத்தில் பல குழுக்கள் இவ்வகையில் தோற்றம் கண்டன. நாடகமுறையில் வேறுபாடு இருந்த போதும் செயல்பாட்டிலும், நோக்கத்திலும் ஒன்றுபட்டு உழைத்தன. சம்பந்த முதலியாரின் மனோகரா நாடகத்திற்குச் சுவாமிகளின் பாடல்கள் மெருகூட்டியதை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். பல பயின்முறையிலான குழுக்கள் கற்றவர் மத்தியில் தோன்றின. அதுபோலவே சங்கரதாசு சுவாமிகளின் தொழில் முறையைப் பின்பற்றி தி.க. சண்முகம் ச கோதரர்கள், நவாப் ராஜமாணிக்கம் போன்ற பல சிறந்த கலைஞர்கள் தனி நாடகக் குழுக்களின் மூலம் நாடகங்கள் படைத்தளித்தனர். இன்றும் இவ்வகையில் பல நாடகக் குழுக்கள் பணியாற்றி வருகின்றன. சம்பந்த முதலியார் மற்றும் சங்கரதாசு சுவாமிகள் ஆகியோரின் பயிற்சியின் விளைவாகப் பல சிறந்த கலைஞர்கள் உருவாக்கப்பட்டனர். இவர்களில் பலர் தமிழ் நாடகக் கலையின் தொடர் செயல்பாட்டுக்காக அயராது உழைத்துச் சிறப்புப் பெற்றனர். தி.க. சண்முகம் சகோதரர்கள், தெ.பொ. கிருட்டிணசாமி பாவலர், என்.எஸ். கிருட்டிணன், எஸ்.வி. சகஸ்ரநாமம் போன்ற பலர் நாடக மேடையின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்துள்ளனர். தமிழ் நாடகம் இன்றைய சிறப்பான நிலையை அடைய இவ்விரு கலைஞர்களின் அயராத உழைப்பு முக்கியமாகிறது. தமிழில் பல நல்ல நாடக நூல்கள் உருவாகவும் இவர்களின் அரிய முயற்சியே காரணமாயிற்று. நல்ல பார்வையாளர் தமிழ் நாடகத்திற்குக் கிடைப்பதற்கும் இவர்களின் நல்ல நாடக முயற்சிகளே காரணமாக அமைந்தன. இவ்வகையில் சம்பந்த முதலியாரும், சங்கரதாசு சுவாமிகளும் இருவகைச் செயல்பாட்டின் மூலம் தமிழ் நாடக வளர்ச்சியின் முன்னோடிகளாக விளங்கினார்கள். |