5.6 தொகுப்புரை

தமிழ் நாடக மேடைக்கான பல சீரமைப்புப் பணிகள் இக்கால
கட்டத்தில் நடைபெறலாயின. புதிய தலைமுறைக் கலைஞர்கள்
தோன்றி வளர்ந்தனர். அவர்கள் அந்தக் கால கட்டத்தில் நாடகப்
பணிக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள்.

புதிய நாடகக் குழுக்களும், அவற்றின் மூலம் புதுப்புது
நாடகங்களும் உருவாக்கம் பெற்றன.

நல்ல பார்வையாளர் தமிழ் நாடக மேடைக்குக் கிடைத்தனர்.
இவ்வகையில் நாடகத் துறையில் மறுமலர்ச்சி ஏற்பட்டது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. நடிப்புப் பயிற்றுவித்தலில் தேர்ந்த இருவரைக் குறிப்பிடுக.

விடை

2. மேடை அச்சம் வராதிருக்க எவ்வகைப் பயிற்சி அளிக்கப்
பெற்றது?

விடை

3.
சட்டாம் பிள்ளை எனப்படுபவர் யார்?

விடை

4. தொழில் முறை நாடகக் குழுவினர் தொடக்கத்தில்
யாருடைய நாடகங்களை அதிகம் மேடையேற்றினர்?

விடை

5. இக்காலகட்ட நாடகங்களில் எந்தெந்த சமுதாயப்
பிரச்சினைகள் இடம் பெறலாயின?

விடை

6. பிற்காலத்தில் நாடகப் பாடல்கள் எவ்வாறு பயின்று
வந்தன?

விடை