நாடகம் ஒரு தனித்தன்மை வாய்ந்த
கலை வடிவம்
என்பதனை நாம் அறிவோம், அது பன்முகக்கூறுகளைத்
தன்னகத்துக் கொண்டு
விளங்குகிறது. அக்கூறுகளின்
வெளிப்பாடுகள், நாடகக்கலையைப் பல்வேறு
வகையாகப்
படைத்தளிப்பதற்கு உதவுகிறது. நாம் பார்க்கவும், பகுத்து
உணரவும்தக்க நல்ல உயிரோட்டமுள்ள கலையாக நாடகம்
உருவாக, படைப்பு நிலை காரணமாகிறது. இவ்வடிப்படைத்
தன்மை நாடகத்தைப் பல்வேறு வகையாக வகைப்படுத்துகிறது.
இவ்வகைப்பாடு படைப்புநிலை, பண்புநிலை, முடிவுநிலை, சுவை,
கதை மற்றும் அளவு சார்ந்த நிலைகளின்
அடிப்படையில்
அமைகிறது. இவ்வகைகளின் வரலாறு, தமிழ்
நாடகத்தின்
மேம்பட்ட வளர்ச்சியினைப் புலப்படுத்தும்
வண்ணம்
அமைந்துள்ளமையைக் காணலாம். அதனை
விளக்குவதே
இப்பாடத்தின் நோக்கமாகும். |