பாடம் 5
C02135 : பெயரெச்சம், வினையெச்சம்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
பெயரெச்சம், வினையெச்சம் ஆகியவற்றின் அமைப்பினை இந்தப் பாடம் எடுத்துரைக்கின்றது. பெயரெச்சமும் வினையெச்சமும் எவ்வகைச் சொற்களைக் கொண்டு முடியும் என்பது பற்றி விளக்குகின்றது. இருவகை எச்சமும் காலம் காட்டும் முறைகள் குறித்து விவரிக்கின்றது. உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் இருவகை எச்சங்களும் பொருள்தரும் முறைகளைக் குறிப்பிடுகின்றது.
| |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
- எச்சங்கள், தொடர்களில் இடம்பெறும் முறைகளைத்
தெரிந்து கொள்ளலாம்.
- எச்சங்கள் அடுக்கி வரும் தன்மை பற்றி அறிந்து
கொள்ளலாம்.
- எச்சங்களின் வடிவத்திற்கும் பொருளுக்கும் இடையிலான
தொடர்பினை அறியலாம்.
- எச்சங்கள், பொருள் தெளிவும் சிறப்பும் அளிக்கும்
முறைகளைப் புரிந்து கொள்ளலாம்.
| |
|