1.2 ஐந்திணை

    அகப்பொருள் இலக்கணத்தில் முதன்மையானதும் சிறப்பானதும்
ஐந்திணையே ஆகும். அது அன்பின்ஐந்திணை என்றே
அழைக்கப்படும். குறிஞ்சி முதலான ஐந்து பெயர்களில் வழங்கப்படும்.
இவை தலைவன் - தலைவி இருவரது மனம் ஒத்த அன்பை
மையமாக வைத்து வகுக்கப்பட்ட இலக்கணங்கள் ஆகும்.

    அகவாழ்க்கையில் நிகழும் செயல்பாடுகளை (ஒழுக்கங்களை)
ஐந்து பெரும் பிரிவுகளில் அடக்கி, அவற்றுக்கு நில அடிப்படையில்
குறிஞ்சி முதலான பெயர்களை அமைத்தனர். அவ்வாறு வகுக்கப்பட்ட
ஐந்திணைகளுக்கும் அடிப்படையாக அமையும் பொருள்களை
முதற்பொருள்,     கருப்பொருள்,     உரிப்பொருள் என
மூவகைப்படுத்துவர்.

1.2.1 ஐந்திணை முப்பொருள்

    ஐந்திணை ஒழுக்கத்தோடு தொடர்புடைய உலகப்பொருள்களை
முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற மூன்று
பாகுபாடுகளில் அடக்கிக் கூறுவர்.

1.2.2 முதற்பொருள்

    முதன்மையும் அடிப்படையுமான பொருள் முதற்பொருள்
எனப்பட்டது. ‘மலை’ முதலான நிலங்களும் ‘மாலை’ முதலான
பொழுதுகளும் முதற்பொருளாகும். ஆகவே, முதற்பொருள் நிலம்,
பொழுது
என இருவகைப்பட்டது.

1.2.3 கருப்பொருள்

    ஒவ்வொரு நிலத்தையும் சார்ந்து - அங்கு விளங்கும், வாழும்,
திகழும் பொருள்கள் யாவும் கருப்பொருள்களே. இலக்கண
நூல்களில் கருப்பொருள்கள் 14 என வரையறுக்கப்பட்டுள்ளன.
தெய்வம், உணவு, பறவை, விலங்கு, தொழில், பண் முதலியன
இவற்றுள் அடங்கும்.

1.2.4 உரிப்பொருள்

    ஒவ்வொரு நிலத்து மக்களும் நிகழ்த்தும் ‘ஒழுக்கம்’
உரிப்பொருள் ஆகிறது. ஒரு நிலம் சார்ந்து அங்குள்ள
கருப்பொருள்களை அடிப்படையாக வைத்துப் பாடப்பெறும்
பாடல்களில் அந்த நிலத்துக்குரிய ஒழுக்கமும் இடம்பெறும்.
அவ்வொழுக்கம் தலைவனும் தலைவியும் சேர்ந்திருக்கும்
‘புணர்ச்சி’யும் அதன் நிமித்தமும் (காரணம்) - முதலாக ஐந்து
வகைப்படும். இவற்றின் விளக்கத்தை நீங்கள் அட்டவணையில்
காணலாம்.

1.2.5 ஐந்திணை முப்பொருள் விளக்க அட்டவணை

    ஐந்து திணைகளுக்கும் உரிய முப்பொருள்களை ஒருங்கு
தொகுத்துக் காட்டுவதாகக் கீழ்வரும் அட்டவணை அமைகிறது.

வ.

ண்
திணை
முதற்பொருள்
கருப்-
பொருள்கள்
சில
உரிப் பொருள்-
கள்
நிலம்
பொழுது1.குறிஞ்சி
மலையும்
மலை
சார்ந்த
நிலமும்
சிறு
பொழுது

நள்ளிரவு
பெரும்
பொழுது

குளிர்காலம்முருகன்,
குறவன்,
கிளி,
மயில்,
புலி,
அருவிநீர்,
சந்தன
மரம்,
தினை
அரிசி,
வெறியாடல்
புணர்தலும்
புணர்தல்
நிமித்தமும்
(நிமித்தம்=
காரணம்;
புணர்தல்
=
ஒன்று
சேர்தல்)

2.

முல்லைகாடும்
காடு
சார்ந்த
நிலமும்

மாலை

மழைக்
காலம்

திருமால்,
ஆயர்,
காட்டுக்
கோழி,
மான்,
முயல்,
காட்டாறு,
ஆடு,
வரகு,
குழலூதுதல்,
ஏறு தழுவுதல்.


இருத்தலும்
இருத்தல்
நிமித்தமும்
(இருத்தல்=
பிரிவைப்
பொறுத்து
இருத்தல்)

3.

மருதம்


வயலும்
வயல்
சார்ந்த
நிலமும்

வைகறை

கார்காலம்
முதலான
எல்லாக்
காலமும்
உரியது.

இந்திரன்,
உழவன்,
அன்னம்,
எருமை,
ஆறு,
கிணறு,
தாமரை,
நெல்.
அரிசி,
உழவு.

ஊடலும்
ஊடல்
நிமித்தமும்
(ஊடல்=
தலைவி,
தலைவன்
மீது கோபம்
கொள்-
ளுதல்)


4.

நெய்தல்


கடலும்
கடல்
சார்ந்த
பகுதியும்

பிற்பகல்
(சூரியன்
மறையும்
நேரம்)

கார்காலம்
முதலான
எல்லாக்
காலமும்
உரியது.

வருணன்,
பரதவர்,
கடற்காகம்,
சுறா மீன்,
பாக்கம்,
உவர்நீர்க்
கேணி,
தாழைமலர்,
மீனும்
உப்பும்
விற்றல்,
கடல்
ஆடல்.


இரங்கலும்
இரங்கல்
நிமித்தமும்
(இரங்கல்=
பிரிவு
தாங்காது
தலைவி
வருந்துதல்)

5.

பாலை


வறண்ட
மணற்
பகுதி
மணலும்
மணல்
சார்ந்த
பகுதி-
யும்.

நண்பகல்

வேனிற்
காலம்

கொற்றவை,
எயினர்,
மறவர்,
புறா,
பருந்து,
செந்நாய்,
குராசு மலர்,
வழிப்பறி,
பகற் சூறை.

பிரிதலும்
பிரிதல்
நிமித்தமும்
(பிரிதல்=
தலைவன்
தலைவியைப்
பிரிதல்)
பிரிவும்
அதை
ஒட்டிய
செயல்பாடு-
களும்