|
3.3 சீர்
இலக்கணம்
எழுத்து, அசை ஆகியவற்றை அடுத்து,
செய்யுள் உறுப்புகளுள்
மூன்றாவதாக இருப்பது சீர். இது அசைகள்
சேர்ந்து அமையும்
உறுப்பாகும். தனித்தனிச் சொல்போன்று செய்யுளில் காணப்படும்
உறுப்புத்தான் சீர் என்பது.
|
கற்றதனால்
ஆய பயன்என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். |
இத்திருக்குறளில் முதலடியில் நான்கு
சீர்களும், அடுத்த
அடியில் மூன்று சீர்களும் உள்ளன. பொதுவாக
எல்லாச்
செய்யுள்களிலும் சீர்கள் ஒவ்வொன்றும் இடம் விட்டுத் தனித் தனிச்
சொற்கள் போல அமைக்கப்பட்டிருக்கும். ஒரு சீரில்
அசை
இரண்டோ அல்லது மூன்றோ பொதுவாக இடம் பெற்றிருக்கும்.
ஓர் அசை மட்டுமே அமைந்த சீர்களும் உண்டு. நான்கு
அசைகளையுடைய சீர்களும் உண்டு. இருப்பினும் இத்தகைய நான்கு
சீர்கள் அருகியே (எங்கோ ஓரிரு இடங்களில்
மட்டும்)
செய்யுள்களில் காணப்படும்.
3.3.1
சீர் வகைகள்
சீர்கள்
நான்கு வகைப்படும். அவை :
1.
|
ஓரசைச்
சீர்கள் |
2.
|
ஈரசைச்
சீர்கள் |
3.
|
மூவசைச்
சீர்கள் |
4.
|
நாலசைச்
சீர்கள் என்பனவாகும். |
ஓரசைச்சீர் என்பது தனியாக ஒரு
நேரசையோ அல்லது
நிரையசையோ சீராக அமைவதாகும்.
‘வா’ என்பது ஒரு நெடில். இதுவே,
‘வாடியது’ என்னும்
சொல்லில் ‘வா’ என ஓர் அசையாக உள்ளது. இதுவே வெண்பாவின்
(கடைசி) ஈற்றுச்சீராக வரும்போது,
‘எங்குமே
தங்காமல் வா’
என
அமையும். இந்த அடியில் ‘வா’ என்பது ஒரு சீராக
உள்ளது. ஆகவே, ஒரே எழுத்தே ஓர் இடத்தில் எழுத்தாகவும், ஓர்
இடத்தில் அசையாகவும், ஓர் இடத்தில் சீராகவும்
வரும்.
இடத்திற்கேற்ப இது எவ்வாறு உள்ளது என அறிய வேண்டும்.
நேர், நிரை என்னும் அசைகள் தனித்தனியே
ஒரு சீராக வரும்
எனப் பார்த்தோம்.
இவ்விரு அசைகளையும் கொண்டு வெவ்வேறு
அமைப்பிலான
ஈரசைச் சீர்களை உருவாக்கலாம்.
நேர்
நேர் நிரை நேர் |
|
நிரை
நிரை
நேர் நிரை
|
 |
எனும்
இவை நான்கும் ஈரசைச் சீர் களாகும்.
இவற்றை
அடுத்து மூவசைச் சீர்கள் பற்றிக் காண்போம்.
இந்த நான்கையும் அடிப்படையாகக்
கொண்டு இவற்றின்
இறுதியில் நேர் என்பதையோ அல்லது நிரை என்பதையோ
சேர்த்தால் மூவசைச் சீர்கள் எட்டுக் கிடைக்கும்.
அவையாவன :
இவ்வாறு
மூவசைச்சீர்கள் எட்டுக் கிடைக்கும்.
இவற்றுள்
நேரசையை இறுதியில் கொண்ட சீர்கள் நான்கு, நிரையசையை இறுதியில் கொண்ட
சீர்கள் நான்கு ஆகும்.
மூவசைச் சீர்கள் எட்டின் இறுதியிலும்
நேர் என்னும்
அசையைச் சேர்த்தால் எட்டு நாலசைச்சீர் கிடைக்கும். இது போல்
நிரை என்னும் அசையை இறுதியில் சேர்த்தால் எட்டு நாலசைச்சீர்
கிடைக்கும். இவையே பொதுச்சீர் எனப்படு்ம். இவற்றைப் பற்றி
மேல்வகுப்பில் விளக்கமாகப் படிக்கலாம்.
இவ்வாறு, ஓரசைச்சீர், ஈரசைச்சீர்,
மூவசைச்சீர், நாலசைச்சீர்
எனச் சீர்கள் நான்கு வகைப்படும். மேலும், இவை ஓரசைச்சீர் 2,
ஈரசைச்சீர் 4, மூவசைச்சீர் 8, நாலசைச்சீர் 16 என ஆகி, சீர்கள்
முப்பது என உள்ளன என்பது நினைவிற்குரியது.
3.3.2
சீர் வாய்பாடுகள்
ஓரசை, ஈரசை மட்டும் உள்ள சீர்களை
வேண்டுமானால்
எளிதில் நினைவிற் கொள்ளலாம். பிற சீர்களில் உள்ள அசைகளை
அவ்வளவு எளிதில் நினைவில் வைத்துக் கொள்வது இயலாது.
எனவே, யாப்பு இலக்கண ஆசிரியர்கள் அவற்றையும் நினைவில்
கொள்ள எளிய ஒரு முறையைக் கண்டறிந்தனர். அதற்கு ‘வாய்பாடு’
என்று பெயர். பல்லாயிரக் கணக்கான சொற்களில் ஒரு சீர் என்ன
அமைப்பில் உள்ளது என்பதை ‘வாய்பாடு’ என்பதன் வழி எளிதில்
சுட்டலாம். ஈரசைச்சீர்களுக்கான வாய்பாடுகளை முதலில் காண்போம்.
‘மாமா’,
‘நீ யார்’ என்பவற்றில் நேர் நேர் எனும் அசைகள் உள்ளன.
இதனைத் ‘தேமா’ என்னும் வாய்பாடாகச்
சுட்டியுள்ளனர்.
இதுபோல் பிற சீர் வகைகளுக்கான வாய்பாடுகள்
கீழே தரப்பட்டுள்ளன.
சீர்கள்
|
வாய்பாடு
|
சரியா,
புதிதா |
புளிமா (நிரை, நேர்) |
எதுமுறை,
திருமணம் |
கருவிளம் (நிரை, நிரை) |
யாரிவன்,
கார்முகில் |
கூவிளம் (நேர், நிரை) |
மூவசைச் சீர்களுக்கான வாய்பாடுகள்
காய், கனி என முடியக்
கூடியனவாய் உள்ளன. நேரசையில் முடிபவை ‘காய்’ என்னும்
சொல்லாலும், நிரையசையில் முடிபவை ‘கனி’ என்னும் சொல்லாலும்
முடிகின்றன.
சான்றுகள்
:
சீர்கள்
|
வாய்பாடு
|
கோபாலா,
நீவாடா |
தேமாங்காய் (நேர், நேர், நேர்) |
விடையாகும்,
புரியாதா |
புளிமாங்காய் (நிரை, நேர், நேர்) |
அது
சரிதான், அவள்
சிரித்தாள் |
கருவிளங்காய் (நிரை, நிரை, நேர்) |
ஏன்
அழுதாய்,
நானறிவேன் |
கூவிளங்காய் (நேர், நிரை, நேர்) |
முன்மாதிரி,
உன்
வீடெது? |
தேமாங்கனி (நேர், நேர், நிரை) |
அதுதான்
சரி, சரியா
இது |
புளிமாங்கனி (நிரை, நேர், நிரை) |
மழைவரும்
நேரம்,
அவளிடம்கொடு |
கருவிளங்கனி (நிரை, நிரை, நிரை) |
நீ
வரும் இடம், உன்
விடை சரி |
கூவிளங்கனி (நேர், நிரை, நிரை) |
அசைச்சீர்களின்
வாய்பாடுகள்
ஓரசைச் சீர்களுக்கு நாள்
(நேர்), மலர் (நிரை) எனும்
சொற்களை வாய்பாடுகளாகச் சுட்டி உள்ளனர். இவை,
குற்றியலுகரத்தில் முடிந்தால் காசு, பிறப்பு
எனும் வாய்பாடுகளைப்
பெறும்.
பொதுச்சீர்களின்
வாய்பாடுகள்
நாலசைச் சீர்களுக்கான வாய்பாடுகள்
இருவகையான, ஒரே
முறையிலான வாய்பாடுகளை அடுத்தடுத்துச் சேர்த்து
உருவாக்கப்படுகின்றன. ஈரசைச் சீர்களுக்கான வாய்பாடுகள் தேமா,
புளிமா, கருவிளம், கூவிளம் என்பதை முன்பே நீங்கள்
அறிந்துள்ளீர்கள். இவை,
நேர் நேர், நிரை நேர், நிரை
நிரை, நேர் நிரை என்பவற்றுக்கு
உரியவை. இவற்றுக்குப் பொருத்தமான இன்னொரு வகை
வாய்பாடுகளான
தண் பூ, நறும் பூ, நறுநிழல், தண்ணிழல்
என்பவற்றை முன்
பார்த்த தேமா, புளிமா முதலியவற்றோடு சேர்த்தால் 16 நாலசைச்சீர்கள் வரும். இவை பற்றி நீங்கள் மேல்வகுப்பில்
விரிவாகப் படிக்கலாம்.
பாக்களுக்குரிய
சீர்கள்
நேர்
நேர்
நிரை நேர் |
- (தே
மா)
- (புளி மா) |
|
-
மாச் சீர்கள் 2 |
நிரை
நிரை
நேர் நிரை |
- (கரு
விளம்)
- (கூ விளம்) |
|
-
விளச் சீர்கள் 2 |
என்னும் நான்கு சீர்களும் ஆசிரியப்பாவுக்கு உரியன.
ஆசிரியப்பாவை இயற்பா என்றும் கூறுவர். எனவே, இச்சீர்களை
இயற்சீர் என்றும் கூறலாம்.
மூவசைச்சீரில்
நேரசையை இறுதியில் கொண்ட சீர்கள் நான்கு,
அவையாவன
:
நேர்
நேர் நேர் |
(தே
மாங் காய்) |
 |
காய்ச் சீர்கள் 4 |
|
நிரை
நேர் நேர் |
(புளி
மாங் காய்) |
நிரை
நிரை நேர் |
(கரு
விளங் காய்) |
நேர்
நிரை நேர் |
(கூ
விளங் காய்) |
இவை
நான்கும் வெண்பாவுக்கு உரிய சீர்கள். எனவே,
காய்ச்சீர்கள் நான்கும் வெண்பாவுக்கு உரியன என
எளிதில்
நினைவில் வைத்துக் கொள்ளலாம். வெண்பா உரிச்சீர்களாகிய
இவற்றைப் போலவே நான்கு வஞ்சி உரிச்சீர்கள் உள்ளன.
நேர்
நேர் நிரை |
(தே
மாங் கனி) |
 |
கனிச்
சீர்கள் 4 |
|
நிரை
நேர் நிரை |
(புளி
மாங் கனி) |
நிரை
நிரை நிரை |
(கரு
விளங் கனி) |
நேர்
நிரை நிரை |
(கூ
விளங் கனி) |
நிரையை
இறுதியில் கொண்ட மூவசைச்சீர்கள் நான்கு.
இவற்றுக்குக் கனிச்சீர்கள் என்று
பெயர். இவை நான்கும்
வஞ்சிப்பாவுக்கு உரியன. எனவே இவற்றை வஞ்சி
உரிச்சீர்
என்றும் கூறலாம்.
இவ்வாறு யாப்பு இலக்கணத்தில்
மூன்று பாக்களுக்கு உரிய
சீர்கள் குறிக்கப் பெற்றுள்ளன. கலிப்பாவுக்கு உரிய சீர் என்று
எவையும் இல்லை. அப் பாவில் எல்லாச் சீர்களும் கலந்து வரும்.
|