|
5.3
உவமை அணி - விளக்கம்
அணிகளுக்கெல்லாம் தாயாகவும், தலைமையாகவும்
விளங்குவது
உவமையணி ஆகும். உவமையணியின் வளர்ச்சியே
பிறஅணிகள்.
தெரிந்த ஒன்றைக் கொண்டு,
தெரியாத ஒன்றைப்
புரிந்துகொள்ள உவமையணி தோன்றியது. ‘ஆ போலும் ஆமா‘
(நாட்டுப்பசு போன்றது காட்டுப்பசு) என்பது இதற்குரிய சான்றாகும்.
பின்னர் அழகு கருதி உவமை பயன்படலானது.
தாமரைபோல்
முகம் உடைய பெண் என்பது இதற்குச் சான்று.
பண்பு, தொழில், பயன் ஆகியவற்றின்
அடிப்படையில் ஒரு
பொருளுடன் மற்றொருபொருளை ஒப்புமைப்படுத்திக் கூறுவது,
‘உவமையணி‘ ஆகும்.
(எ.கா)
(1) |
பண்பு |
- பவளம்
போன்ற வாய் (நிறம்) |
|
|
- மூங்கில்
போன்ற தோள் (வடிவம்) |
(2) |
தொழில் |
- புலிபோலப்
பாய்ந்தான் (செயல்) |
(3) |
பயன்
|
- மழை
போன்ற வள்ளல். |
உவமை
என்பது, ஒருபொருளுடன் ஒருபொருள்,
ஒருபொருளுடன் பலபொருள், பலபொருளுடன் பலபொருள்,
பலபொருளுடன் ஒருபொருள் என ஒப்புமைப்படுத்தும் நான்கு
முறைகளில் அமையும்.
(எ.கா)
(1)
|
ஒருபொருளுடன் ஒருபொருள்
- செவ்வான் அன்னமேனி
(செவ்வான் - செவ்வானம்; மேனி
- உடல்) |
(2)
|
ஒரு
பொருளுடன் பலபொருள் - பிறைபோன்ற
பற்கள்
(பிறை - பிறைநிலவு) |
(3)
|
பலபொருளுடன்
பலபொருள் - சுறாக்கள் போன்ற
வாள்வீரர்கள் (சுறா -
சுறாமீன்) |
(4) |
பலபொருளுடன் ஒருபொருள் - கரிகாலன்
முன்
தோற்றோடும் பகையரசர்கள் போல், வாடைக்காற்றே
நீ ஓடுவாய் ( பகையரசர்
- பலர் ; வாடைக்காற்று -
ஒருபொருள்) |
பண்பும்
தொழிலும் பயனும்என்று இவற்றின்
ஒன்றும் பலவும் பொருெளாடு பொருள்புணர்த்து
ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை
(தண்டி-31) |
(தொழில் - செயல் ; புணர்த்து - பொருந்த
வைத்து ;
செப்புவது - கூறுவது)
உவமை அணியில் நான்கு கூறுகள்
இருக்கும். அவை
(1) |
உவமை(உவமானம்) |
(2) |
கூற
எடுத்துக்கொண்ட பொருள் (உவமேயம்), |
(3) |
உவமஉருபு |
(4) |
பொதுத்தன்மை
ஆகியன |
(எ.கா)
பால்போலும் இன்சொல்
இதில் பால்
- உவமை ; சொல் - பொருள்;
போலும் -
உவமஉருபு ; இனிமை - இரண்டுக்கும் உள்ள பொதுத்தன்மை
ஆகும்.
5.3.1
உவம உருபுகள்
உவமைக்கும் பொருளுக்கும் இடையிலான
ஒப்புமையை
உணர்த்த வருவது உவமஉருபு ஆகும்.
போல, மான, புரைய, பொருவ, நேர,
கடுப்ப, நிகர, நிகர்ப்ப,
ஏர, ஏய, மலைய, இயைய, ஒப்ப, எள்ள, உறழ, ஏற்ப, அன்ன,
அனைய, அமர, ஆங்க, என்ன, இகல போன்றவை உவம உருபுகள்
ஆகும்.
பயில்முறைப்
பயிற்சி
|
- உவம உருபுகள் அமையுமாறு உவமைகள்
சிலவற்றைக்
கூறிப் பழகுக.
|
|