|
(புணர்ச்சி = தொடர்பு/ கூடியிருத்தல், உணர்ச்சி = ஒத்த
உணர்வுகள், கிழமை = உரிமை, தரும் = கொடுக்கும்)
என்று
குறிப்பிடுகிறார்.
ஒருவருடன்
ஒருவர் நட்புக் கொள்வதற்கு ஒரே இடத்தில் கூடி
இருக்க வேண்டும் என்பதோ, அடிக்கடி கண்டு பழக வேண்டும்
என்பதோ தேவை இல்லை. இருவருக்கும் இடையே ஒருமித்த
கருத்து அல்லது
உணர்வுகள் இருக்குமானால், அதுபோதும்.
அதுவே நட்பு ஏற்படுவதற்கு உரிய உரிமையைக் கொடுக்கும்
என்பது இக்குறள் தரும் செய்தி.
நாட்டை
ஆளும் மன்னன், மக்களின் மன நிலையை அறியும்
ஆற்றல் உடையவனாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான்
நாட்டுப்பற்றுடைய, நாட்டின் முன்னேற்றத்தில்
விருப்பம்
உடையவர்களை அடையாளம் காண இயலும்.
நாட்டு
முன்னேற்றத்திலும் பிறவற்றிலும் பற்றுடையவர்களை
அறிந்து
நண்பர்களாகக் கொண்டால் மன்னனது அரசாட்சிக்கு அவர்கள்
நட்பு பெரும் துணையாக அமையும்.
மேலும்,
கருத்தளவிலும், நோக்கங்களிலும் தம் கருத்துகளுக்கு
ஒத்துச் செல்லக் கூடிய அண்டை நாட்டு அரசன் இருந்தால்
அவனோடு நட்பு கொள்வது சிறப்பு. ஒருமித்த கருத்துடைய
இருமன்னர்கள் ஒருவருக்கு ஒருவர் நட்பு உடையவர்களானால்,
பகையின்றி, போரின்றி, விருப்பு
வெறுப்பின்றி
எல்லைத்தகராறுமின்றி மக்கள் அமைதியாக
இருப்பார்கள்.
அத்தகைய நாட்டு மன்னர்களும் பகையின்றி,
பயமின்றி
நல்லாட்சியை வழங்குவர்.
பிறரோடு
கொள்ளும் நல்உறவு அல்லது
நட்பு ஒருவனின்
பக்குவப்பட்ட உள்ளத்தையும், அவனது பண்பாட்டையும்
புலப்படுத்தும். இத்தகைய பண்பாடு தமிழ் மன்னர்களிடம் இருந்தது.
அதன் வெளிப்பாடே வள்ளுவர் கூறும் கருத்துகள்.
|