|
ஆட்சிக்குத் தலைமை வகிப்பவன் அரசன். அவன் மக்களுக்கு
நன்மை செய்ய வேண்டும். அவர்களுக்குப் பாதுகாப்பாக அமைய
வேண்டும். காட்சிக்கு எளியவனாக இருக்க வேண்டும். மக்களிடம்
கடுமையான சொற்களைப் பயன்படுத்தக்கூடாது. இனிமையாகவே
பேச வேண்டும். இவற்றிற்கு மாறாக நடப்பவன் ஆளுவதற்குத்
தகுதி இல்லாதவன் என்பது வள்ளுவர் கருத்து.
எனவே,
ஆட்சி செய்யும் மன்னன், எந்த ஒரு
செயலைச்
செய்தாலும், நன்கு ஆய்ந்து, தக்க துணையைக் கொண்டு செய்ய
வேண்டும். அத்தகைய இயல்பு கொண்டவனே சிறப்புடைய
மன்னன். இவை போன்ற பல கருத்துகளை
வள்ளுவர்
குறிப்பிடுகின்றார். அவைகள் இப்பாடத்தில்
தொகுத்துக்
கூறப்பட்டுள்ளன.
|