பாடம் - 4

D02124 வஞ்சித் திணை

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


    புறப்பொருள் வெண்பாமாலை கூறும் திணைகளில்
மூன்றாவதாகிய வஞ்சி பற்றிக் கூறுகிறது.

    வஞ்சி, முல்லைக்குப் புறனாக அமைவது என்பதை
விளக்குகிறது.

    வஞ்சியின் துறைகளைக் கூறி, அவற்றை விளக்கிச்
சொல்கிறது. போர் மேற் செல்லும்போது இடம்பெறும்
நிகழ்வுகளை வரிசையாக அமைத்து, அவற்றின் சிறப்பை
எடுத்துரைக்கிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?


  • பழங்காலத்தில் பகை நாட்டின்மீது படையெடுக்கும்
    மன்னர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அறியலாம்.
  • போரின்போதும், போர் முடிவுக்குப் பின்னரும் நிகழும்
    நிகழ்வுகள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
  • படைவீரர்களின் தனிப்பட்ட     மனநிலை,     வீரம்
    முதலியவற்றை அறிந்து மகிழலாம்.
  • வெற்றி பெற்ற மன்னன் திறை பெற்றுக்கொண்டு
    போரைக் கைவிடுதல், வெற்றிக்குப் பிறகு பகை
    மன்னனின் ஊரைத்    தீக்கிரையாக்குதல்    முதலிய
    போருக்குப் பிந்தைய நிகழ்ச்சிகளைப் பற்றி அறிந்து
    கொள்ளலாம்.
  • வெற்றி கண்ட மன்னன் பாசறையில் தங்கியிருந்து
    படைவீரரைப்     பாராட்டிச்     சிறப்பிப்பதையும்
    பாணர்களுக்குப் பரிசளிப்பதையும் அறிந்து மகிழலாம்.

பாட அமைப்பு