பாடம் - 5

D02125 காஞ்சித் திணை

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


    வஞ்சிப் பகைவன் போர் என வரும்போது, காஞ்சியான்
எதிர்ஊன்றல் (எதிர்த்து நிற்றல்) என்பது இயல்பு என்பதை
அறிவிக்கின்றது.

    புறப்பொருள் வெண்பாமாலை காஞ்சித் திணையின்
இலக்கணத்தையும் துறைகளையும் விளக்குவதை எடுத்துச்
சொல்கின்றது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?


  • வஞ்சிப் போரின் மறுதலையாகிய காஞ்சி பற்றியும்,
    காஞ்சி மன்னன் தன்னைக் காத்துக் கொள்வதற்காகப்
    போரிடும் வகை பற்றியும் அறியலாம்.

  • வீரர்க்கு மட்டுமன்றி,போரொடு தொடர்புடையவர்களுக்கும்
    மன்னன் சிறப்புச் செய்வதைத் தெரிந்து கொள்ளலாம்.

  • போர்க்களத்துப்பட்டார் சுவர்க்கம் புகுதல், காதலனொடு
    மனைவி எரிமூழ்கல், கணவனை மாய்த்த வேலினைக்
    கொண்டே மனைவியும் தன்னை மாய்த்துக் கொள்ளுதல்
    முதலிய மரபுகளையும் அறிந்து கொள்ளலாம்.

பாட அமைப்பு