அகப்புறக் கைக்கிளை - விளக்கம் தருக. அகப்புறக்
கைக்கிளை என்பது ஒரு
தலைவன்
காமத்தன்மை உணரும் பக்குவம்
அடையாத இளம்
பெண்ணிடம் சென்று தன் விருப்பத்தைக்
குறிப்பிட்டு அவள்
குறிப்பை அறியாமல்
மேன்மேலும் பேசிக்கொண்டிருப்பதாகும். தலைவன்
- தலைவி என்னும் இருவரில்
ஒருவர்
மட்டும் கொள்ளும் காதல் அல்லது காமம்
கைக்கிளை
ஆகிறது. எதிரில் இருக்கும் இன்னொருவர் அக் காமம்
அல்லது காதலை உணரும் தன்மை
உடையவராக
இல்லாதபோது, அதுவே அகப்புறக் கைக்கிளையாகும்.
|