6.3
வகைப்பாடுகள் |
நம்பியகப்
பொருள் நூல் முழுவதும் இடம் பெற்ற இலக்கணச் |
இலக்கணப் பிரிவு |
அதன் வகை |
இவையே அவை |
தமிழ் இலக்கணம் | 5 | எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி |
பொருள் இலக்கணம் | 2 | அகப்பொருள், புறப்பொருள் |
அகப்பொருள் | 3 | கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை |
ஐந்திணை | 5 | குறிஞ்சி,
பாலை, முல்லை, மருதம், நெய்தல் |
கைக்கிளை | 2 | அகப்பொருட்
கைக்கிளை, அகப்புறக் கைக்கிளை |
அகப்பொருட் | 4 | காட்சி, ஐயம், துணிவு, குறிப்பறிதல் |
பெருந்திணை | 2 | அகப்பொருட்
பெருந்திணை, அகப்புறப் பெருந்திணை |
அகப்பொருள் | 2 | புனைந்துரை, உலகியல் |
முதற் பொருள் | 2 | நிலம், பொழுது |
பொழுது | 2 | பெரும் பொழுது, சிறு பொழுது |
சிறுபொழுது | 5 | மாலை,
யாமம், வைகறை, எற்பாடு, நண்பகல் |
பெரும்பொழுது | 6 | இளவேனில்,
முதுவேனில், கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக் காலம் |
கைகோள் | 2 | களவு, கற்பு |
களவுப் புணர்ச்சி நிலை | 4 | இயற்கைப்
புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கன் கூட்டம், பாங்கியிற் கூட்டம் |
குறியிடம் | 2 | பகற் குறி, இரவுக் குறி |
பகற் குறி வகை | 3 | இரங்கல்,
வன்புறை, இற்செறிப்பு உணர்த்தல் |
பகற் குறி இடையீடு | 3 | விலக்கல், சேறல், கலக்கம் |
இரவுக் குறி | 9 | வேண்டல்,
மறுத்தல், உடன்படுதல், கூட்டல், கூடல், பாராட்டல், பாங்கிற் கூட்டல், உயங்கல், நீங்கல் |
இரவுக் குறி இடையீடு | 2 | அல்லகுறிப்படுதல்,
வரும் தொழிற்கு அருமை |
வரைவு | 2 | களவு
வெளிப்படும் முன்பு வரைதல், களவு வெளிப்பட்ட பின்பு வரைதல் |
அறத்தொடு நிற்கும் | 2 | முன்னிலை
மொழி, முன்னிலைப் புறமொழி |
கற்பு | 2 | களவின் வழி வந்த
கற்பு, களவின் வழி வாராத கற்பு |
கற்பில் பிரிவுகள் | 6 | பரத்தையிற்
பிரிவு, ஓதல் பிரிவு, காவல் பிரிவு, தூதிற் பிரிவு, துணைவயின் பிரிவு, பொருள்வயின் பிரிவு |
காவல் பிரிவு | 2 | அறப்புறம் காவல், நாடு காவல் |
மறையோர்
திருமண | 8 | பிரம்மம்,
பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், கந்தர்வம், ஆசுரம், இராக்கதம், பைசாசம் |
வினை | 2 | நல்வினை, தீவினை |
இயற்கைப் புணர்ச்சி | 2 | தெய்வத்தால்
எய்துவது, தலைவியால் எய்துவது |
வன்புறை | 2 | ஐயம் தீர்த்தல், பிரிவு அறிவுறுத்தல் |
பிரிவுழிக் கலங்கல் | 2 | மருளுற்று
உரைத்தல், தெருளுற்று உரைத்தல் |
இடம்தலைப்பாடு | 3 | தெய்வம் தெளிதல், கூடல், விடுத்தல் |
பாங்கி மதியுடன்பாடு | 3 | முன்னுற
உணர்தல், குறையுற உணர்தல், இருவரும் உள்வழி அவன்வர உணர்தல் |
வரைதல் வேட்கையின் | 3 | அச்சம், உவர்த்தல், ஆற்றாமை |
வரைவு கடாதல் | 4 | பொய்த்தல், மறுத்தல், கழறல், மெய்த்தல் |
களவுப் பிரிவு | 2 | ஒருவழித்
தணத்தல், வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதல் |
ஒருவழித் தணத்தல் | 7 | செலவு அறிவுறுத்தல்,
செலவு உடன் படாமை, செலவு உடன்படுத்தல், செலவு உடன்படுதல், சென்றுழிக் கலங்கல், தேற்றி ஆற்றுவித்தல், வந்துழி நொந்துரை |
வரைவு வகை | 2 | பெண்ணின்
பெற்றோர் உடன்பட்டு வழங்கும் மகட்கொடை, தலைமக்கள் தாமே நிகழ்த்தும் வரைவு |
வரைவின் கிளவிகள் | 2 | வரைவு மலிதல், அறத்தொடு நிற்றல் |
உடன்போக்கு | 8 | போக்கு
அறிவுறுத்தல், போக்கு உடன்படாமை, போக்கு உடன்படுத்தல், உடன்படுதல், போக்கல், விலக்கல், புகழ்தல், தேற்றல் |
கற்பொடு புணர்ந்த | 5 | செவிலி
புலம்பல், நற்றாய் புலம்பல், கவர்மனை மருட்சி, கண்டோர் இரக்கம், செவிலி பின்தேடிச் செல்லுதல் |
மீட்சி | 4 | தெளித்தல், மகிழ்ச்சி, வினாதல், செப்பல் |
தலைவி தோழிக்குச் | 2 | செவ்வணி, வெள்ளணி |
அகப்பாட்டு உறுப்புகள் | 12 | திணை, கைகோள்,
கூற்று, கேட்போர், இடம், காலம், பயன், முன்னம், மெய்ப்பாடு, எச்சம், பொருள் வகை, துறை |
காலம் | 3 | இறந்த
காலம், நிகழ் காலம், எதிர் காலம் |
மெய்ப்பாடு | 8 | நகை,
அழுகை, இளிவரல், மருட்கை (வியப்பு), அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை |
எச்சம் | 2 | சொல்லெச்சம், குறிப்பெச்சம் |
அகப்பாட்டினுள் வரும் | 2 | உவமைப் பொருள், இறைச்சிப் பொருள் |
உவமைப் பொருள் | 2 | உள்ளுறை
உவமம், வெளிப்படை உவமம் |
வெளிப்படை உவமம் | 4 | வினை
உவமம், பயன் உவமம், மெய் உவமம், உரு உவமம் |
அகப்பாட்டினுள் | 2 | பாட்டுடைத்
தலைவன், கிளவித் தலைவன் |
பாட்டுடைத் | 5 | நிலப்பெயர்,
வினைப்பெயர், பண்புப்பெயர், குலப் பெயர், இயற்பெயர் |
பொருள் வகை | 9 | புனல்
யாற்றுப் பொருள்கோள் முதலியன. |
இல்வாழ்க்கைக் கூறுகள் | 4 | தலைவன் மகிழ்ச்சி,
தலைவி மகிழ்ச்சி, தோழி மகிழ்ச்சி, செவிலி மகிழ்ச்சி |
பரத்தையிற் பிரிவு | 4 | வாயில்
வேண்டல், வாயில் மறுத்தல், வாயில் நேர்வித்தல், வாயில் நேர்தல் |
ஊடல் கிளவிகளின் | 2 | உணர்த்த
உணரும் ஊடற்குரியவை, உணர்த்த உணரா ஊடற்குரியவை |