6.4 தொகுப்புரை | |
இப்பாடத் தொகுப்பின் மூலமாகக் கற்றுணர்ந்த செய்திகளாவன : | |
1. | அகப்பொருள் தொடர்பான இலக்கண அமைப்புகளை உணர்ந்தோம். |
2. | அகப்பொருள்
இலக்கணத்தில் சிற்சில அமைப்புச் சிறப்புகளை அறிந்தோம். |
3. | பாலது
ஆணை அல்லது தலைவியின் முயற்சி
இயற்கைப் புணர்ச்சிக்குக் காரணமாதலைக் கற்றறிந்தோம். |
4. | இரு வகைக்
கைக்கிளைக்கு இடையே அமைந்த நுட்ப வேறுபாட்டை உணர்ந்தோம். |
5. | அகப்பொருள்
வாழ்வியலில் தோழியின் முதன்மைச் சிறப்பை உணர்ந்து தெளிந்தோம். |
6. | அகப்பொருள் மரபுகள் பலவற்றைக் கற்றுணர்ந்தோம். |
7. | அகப்பொருள்
இலக்கண அறிவுபெறும் சூழலில் பயன்படும் அருஞ்சொற்கள், வரையறைகள், வகைப்பாடுகள் போன்றவற்றை ஒருங்கு தொகுத்து உணர்ந்தோம். |
தன் மதிப்பீடு : வினாக்கள் - II | ||
1. |
ஐந்திணை என்பன யாவை? | விடை |
2. |
முதற்பொருள் எத்தனை வகைப்படும்? அவை யாவை? | விடை |
3. |
கற்பில் பிரிவுகள் யாவை? | விடை |
4. |
நிமித்தம், நேர்தல், சேட்படை, வன்பொறை - இவற்றின் | விடை |
5. |
செவ்வணி, வெள்ளணி விளக்கம் தருக. | விடை |