1.1 தன்மை அணி |
|
தண்டியலங்கார ஆசிரியர் பொருளணியியலில் குறிப்பிடும் முதலாவது அணி இதுவே. இதற்கு மற்றொரு பெயர் 'தன்மை நவிற்சி அணி' என்பதாகும். தன்மை என்பதற்கு இயல்பு அல்லது இயற்கை என்று பொருள். |
|
1.1.1 தன்மை அணியின் இலக்கணம் |
|
எவ்வகைப்பட்ட பொருளையும் அதன் உண்மைத் தன்மையை விளக்குவதற்கு ஏற்ற சொற்களைக் கொண்டு பாடுவது தன்மை அணி ஆகும். இதனை.
எவ்வகைப் பொருளும் மெய்வகை விளக்கும்
சொல்முறை தொடுப்பது தன்மை ஆகும் (தண்டி. 29)
|
என்ற நூற்பாவைக் கொண்டு அறிந்து கொள்ளலாம். பொருளின் இயல்பை நேரில் பார்த்ததுபோலத் தோன்றுமாறு உள்ளபடி விளங்கச் சொல்லுவது தன்மை அணி. சுருங்கச் சொன்னால் 'உள்ளதை உள்ளவாறு கூறல்' தன்மை அணி எனலாம். |
|
1.1.2 தன்மை அணியின் வகைகள் |
|
தன்மை அணி 'பொருள், குணம், இனம், தொழில்' என்னும் நான்கின் அடிப்படையில் தோன்றும் எனவே தன்மையணி பொருள் தன்மை, குணத் தன்மை, இனத் தன்மை, தொழில் தன்மை என நான்கு வகைப்படும். ஒரு பொருளின்
தன்மையைக் கூறுவது பொருள் தன்மை; ஒரு
குணத்தின் தன்மையைக் கூறுவது குணத்தன்மை. ஒரு இனமின் - இனத்தின் தன்மையைக் கூறுவது இனத் தன்மை;
ஒரு தொழிலின் தன்மையைக் கூறுவது தொழில் தன்மை ஆகும். இவற்றுள் முதற்கண் கூறப்படும் பொருள் தன்மை அணியைச் சான்றுடன் விளக்கமாகக் காண்போம்.
. பொருள் தன்மை
ஒரு பொருளின் பல விதமான இயல்புகளை உள்ளவாறு எடுத்துக் கூறுவது பொருள் தன்மையாகும்.
எடுத்துக்காட்டு:
நீல மணிமிடற்றன்; நீண்ட சடைமுடியன்;
நூல்அணிந்த மார்பன்; நுதல்விழியன்; -
தோல்உடையன்;
கைம்மான் மறியன்; கனல்மழுவன்; கச்சாலை
எம்மான் இமையோர்க்கு இறை |
இப்பாடலின் பொருள்:
திருக்கச்சாலை என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும்
எம்பெருமானாகிய சிவபெருமான் கருங்குவளை மலர் போன்ற அழகிய கழுத்தை உடையவன்; நீண்ட சடைமுடியை உடையவன்; முப்புரி நூல் அணிந்த மார்பினை உடையவன்; நெற்றிக்கண்ணை உடையவன்; புலித்தோல் ஆடை அணிந்தவன்; கையிலே மான்
குட்டியையும் கனலையும் மழுவினையும் (கோடரியையும்)
ஏந்தியவன்; அவன் தேவர்க்கும் இறைவன் ஆவான்.
அணிப் பொருத்தம்: இப்பாடலில் 'சிவபெருமான்' என்ற பொருளின் (உருவத்தின்)
பல விதமான தோற்ற இயல்புகளை நேரில் பார்ப்பது போல உள்ளவாறு கூறியிருப்பதால் இப்பாடல் பொருள் தன்மை அணி ஆயிற்று. |