தன் மதிப்பீடு : வினாக்கள் - II (விடைகள்) |
|
6. |
பரியாய அணிக்கும், ஒட்டு அணிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைக் குறிப்பிடுக. |
பரியாய அணி, ஒட்டு அணி இரண்டுமே கருதிய கருத்தை மறைத்துக் கூறுவன. இது, இவ்விரண்டிற்கும் இடையே உள்ள ஒற்றுமை ஆகும். ஆனால், ஒட்டு அணியில் கருதிய கருத்தினைக் கூறாது அதனோடு உவமையாகக் கூடிய பிறிதொரு கருத்துக் கூறப்படும்; பரியாய அணியிலோ கருதிய கருத்தினைக் கூறாது அதற்கு வேறான பிறிதொரு கருத்துக் கூறப்படும். இது இவ்விரண்டு அணிகளுக்கும் இடையே உள்ள வேற்றுமை ஆகும். |