தன் மதிப்பீடு : வினாக்கள் - I (விடைகள்)

4.

மாறுபடு புகழ்நிலைக்கும், புகழ்வது போலப்
பழித்திறம் புனைதலுக்கும் உள்ள வேறுபாட்டைக்
கூறுக.

    மாறுபடு புகழ்நிலை, ஒன்றனைப் புகழ்ந்து
கூறுவது, அதனோடு எவ்விதமான தொடர்பும் இல்லாத
பிறிது ஒன்றற்குப் பழிப்பாய்த் தோன்றுவது ஆகும்.
புகழ்வது போலப் பழித்திறம் புனைதல் என்பது,
ஒன்றனைப் புகழ்ந்து கூறுவது, அதற்கே பழிப்பாய்த்
தோன்றுவது ஆகும்.

முன்