6.3 மருத்துவப் பெயர் பெற்றவை நல்ல நெறியையும் அறத்தையும் எடுத்துக் கூறுவதே பதினெண்கீழ்க் கணக்கு நூல்களலின் நோக்கம் என்பதை அறிந்து கொண்டோம். உள்ளத்துச் சிக்கல்களைத் தீர்க்கும் வழி கூறும் நூல்களுக்குப் பல வகையாகப் பெயர் சூட்டியுள்ளதைப் பார்த்தோம். உடல் சிக்கல்களைத் (நோய்களை) தீர்க்கும் மருந்துகளின் பெயர்களும் சில நூல்களுக்கு இடப்பட்டுள்ளன. அவற்றைப் பார்க்கலாம். சிறுபஞ்சமூலம் என்பது ஒரு மருந்தின் பெயர். மூலம் = வேர். சிறிய ஐந்து வேர்கள் சேர்ந்த மருந்து போல ஒவ்வொரு பாட்டிலும் ஐந்து ஐந்து கருத்துகள் உள்ளன. கண்டங்கத்திரி வேர், சிறுவழுதுணை வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர், நெருஞ்சி வேர் என்பன அம்மூலிகைகள். இவை ஐந்தும் சேர்ந்த மருந்துக்கு இந்நூல் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒப்பாகும். இந்நூலின் ஆசிரியர் காரியாசான். இந்நூலிலே 97 வெண்பாக்கள் உள்ளன. கடவுள் வாழ்த்துப் பாடலையும், இறுதியில் உள்ள பாயிரப் பாடலையும் சேர்த்தால் 99 வெண்பாக்கள் ஆகும். சிறுபஞ்ச மூலத்திலே பல சிறந்த கருத்துள்ள பாடல்களைக் காணலாம். மக்களுக்கு அழகைத் தருவன இன்னின்னவை என்று இரண்டு வெண்பாக்கள் கூறுகின்றன. அவை அழகானவை. அவற்றுள் ஒன்று:
கண்வனப்புக் கண்ணோட்டம் ; கால்வனப்புச் செல்லாமை கண்ணுக்குக் கண்ணாடி அழகு அன்று ; அல்லது மைதீட்டிக் கொள்வது அன்று; துன்பப்படும் மக்களிடம் இரக்கம் காட்டுவதே கண்ணுக்கு அழகு. மதியாதார் தலைவாசலை மிதிப்பதற்குச் செல்லாமைதான் காலுக்கு அழகு; இத்துணை என்று தவறாமல் கணக்கிட்டுக் கூறுதலே கணக்குக்கு அழகாகும்; கேட்பவர்கள் நன்று ! நன்று ! என்று சொல்லிச் சுவைக்கும்படி பாடுவதுதான் பாட்டுக்கு அழகு; அரசனுக்கு அழகு தனது நாட்டு மக்களைத் துன்புறுத்த மாட்டான் என்று சொல்லப்படுவதாகும். ஏலாதி என்பது ஒரு மருந்தின் பெயர். அம்மருந்தின் பெயரே நூலுக்குப் பெயராயிற்று. திணைமாலை நூற்றைம்பது எழுதிய கணிமேதாவியாரே இந்நூலையும் எழுதியுள்ளார். ஏலம், இலவங்கம், சிறுநாவல்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு இவ்வாறும் ஏலாதி (ஏலம் +ஆதி) என்பது பண்டைய மருத்துவ நூலார் முடிவு. இந்த ஆறு சரக்குகளையும் சேர்த்துச் செய்த சூரணம் (பொடி) உடல் நோய்க்கு மருந்தாகும். ஏலாதி என்னும் இந்நூலிலே ஒவ்வொரு பாட்டிலும் ஆறு செய்திகள் கூறப்படுகின்றன. உடல்நோயைத் தீர்ப்பதுபோல, உளநோயைத் தீர்ப்பது ஏலாதி. ஏலாதியில் உள்ள வெண்பாக்கள் எண்பது; சிறப்புப் பாயிரம், கடவுள் வாழ்த்து இரண்டும் சேர்த்து 82 வெண்பாக்கள் உள்ளன. வடசொற்கள் மிகுதியாகக் கலந்துள்ள பாடல்களாகும். தூதர்களுக்கு வேண்டிய தகுதிகள் பற்றி ஒரு வெண்பா கூறுகிறது.
மாண்டுஅமைந்தார் ஆய்ந்த மதிவனப்பே, வன்கண்மை சிறந்த நூலறிவு, ஒழுக்கம், தன் நாட்டு நிலைமை, அந்நிய நாட்டு நிலைமை ஆகியவற்றை ஆராயும் அறிவு இவற்றுடன் கண்டார்கள் விரும்பும் தோற்றமும் வேண்டும். பகைவர்க்கு அஞ்சாமல் உண்மையைக் கூறும் துணிவு; காலமறிதல் ஆகிய ஆறு குணங்களும் உடையவனாதல் வேண்டும் தூதன் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது. திருக்குறள் கருத்துகளும் இந்நூற் பாடல்களில் தோய்ந்துள்ளன. நல்லாதனார் என்னும் புலவர் 101 வெண்பாக்களால் இந்நூலை யாத்துள்ளார். சுக்கு, மிளகு, திப்பிலி என்ற இம்மூன்றும் சேர்ந்த மருந்திற்குத் திரிகடுகம் என்று பெயர். அது உடல்நலனைக் காக்க உதவும். அதுபோல, ஒவ்வொரு பாடலிலும் மக்களுக்கு நலம் பயக்கும் மூன்று உறுதிப்பொருள்களைக் கூறுகின்றமையால் இது திரிகடுகம் எனப்பட்டது. திருமாலுக்கு கடவுள் வணக்கம் கூறும் இவ்வாசிரியர் வைணவ சமயத்தைச் சார்ந்தவர் என்பர். இந்நூலின் முதற்பாட்டுத் திரிகடுகம் என்ற சொல்லையே குறிப்பிடுகிறது. அருந்ததிக் கற்பினார் தோளும் திருந்திய என்பது அப்பாடல். ஒவ்வொரு பாடலின் மூன்றாமடி இறுதியிலும், ‘இம்மூவர்’ அல்லது ‘இம்மூன்றும்’ என இடம்பெறுவது குறிப்பிடத்தக்கதாகும். |