பெருங்காப்பியத்தில்
1. வாழ்த்துதல்,
தெய்வம் வணங்குதல்,உரைக்கும்
பொருள் உணர்த்தல் எனும் மூன்றினுள் ஒன்று முன்வர நடக்க வேண்டும்.
அதாவது பெருங்காப்பியத்தில்
கடவுள் வாழ்த்து அமைதல் வேண்டும்.
சீவக
சிந்தாமணிக் காப்பியம்
மூவா முதலா உலகமொரு மூன்று
என்று கடவுள் வாழ்த்தோடு தொடங்குகிறது.
மணிமேகலை
பதிகத்தில் சம்பாபதித் தெய்வத்தொடு தொடங்குகிறது. கடவுள் வாழ்த்து இல்லை.
பெருங்கதையில்
கடவுள் வாழ்த்து இருந்திருக்கலாம். ஆனால் தொடக்கம் மறைந்து
போனதால் நமக்குக் கிடைக்கவில்லை.
எந்தத் தெய்வப் பெயரையும் கூறாமல்,
இளங்கோவடிகள் சிலம்பின் மங்கல வாழ்த்துப் பாடலில் திங்கள் (நிலா), ஞாயிறு
(சூரியன்), மாமழை, புகார் போற்றுதல் என்ற இயற்கை சார்ந்த போற்றுதலை முன்வைத்துப்
புதுமை படைக்கிறார்.
திங்களைப்
போற்றுதும் திங்களைப் போற்றுதும்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
- (சிலப்பதிகாரம் - புகார்க்காண்டம்)
2. நாற்பொருள்
‘நாற்பொருள்
பயக்கு நடைநெறித்தாகி’ பெருங்காப்பியங்கள் அமைக்கப் படல் வேண்டும்.
அறம், பொருள், இன்பம், வீடு
எனும் நான்கு பொருட்களைப் பெருங்காப்பியம் வலியுறுத்திப் பாட வேண்டும்.
இந்நான்கினுள் ஏதாவது ஒன்றோ,
பலவோ குறைந்து வருவதைத் தண்டியாசிரியர் காப்பியம்
அதாவது சிறுகாப்பியமென்றார்.
அறமுதனான்கினுங்
குறைபாடு உடையது
காப்பிய மென்று கருதப்படுமே.
- (தண்டியலங்காரம்-10)
சிலப்பதிகாரம்
நாற்பொருளையும் பாடவில்லை. அறம், பொருள், இன்பம் எனும் மூன்றினையே பாடுகிறது.
துறவினையும், பசி போக்குதலையும்,
சமுதாய சீர்திருத்தத்தையும் முன் நிறுத்திப் பாடிய
மணிமேகலை அறத்தையும் வீடுபேற்றையும்
மட்டுமே பாடியது. பொருளும், இன்பமும் மேகலைக்
காப்பியத்தில் வலியுறுத்தப் படவில்லை.
பெருங்கதை
நான்கு பொருட்களையும் பாடுகிறது. மு.அருணாசலம்
இலக்கியக் கொள்கை எனும் நூலில் “பெருங்கதை
நாற்பொருளும் கூறுவதே; இறுதிப் பகுதி இறந்து போயினும், நூலின் இடையே அருகனைத்
தலைவன் வழிபட்ட செய்திகள் விரிவாகச் சொல்லப்பட்டமையால் வீடும் கூறிற்று என்று
கொள்ளலாம்” எனக் கருத்துரைக்கிறார்.
3. தன்னிகர் இல்லாத தலைவன்
குறைபாடுகள் ஏதும் அற்ற, எதையும்
முடிக்கும் வலிமை வாய்ந்த தன்னிகர் இல்லாத் தலைவனைப்
பெற்றுப் பெருங்காப்பியங்கள் அமைதல் வேண்டும்.
சிலம்பு,
மணிமேகலை இரு காப்பியங்களிலும் தன்னிகரற்ற
தலைவன் இல்லை. தன்னிகரற்ற தலைவியரே இடமபெறுகின்றனர்.
இரட்டைக் காப்பியங்களாய்த் திகழும் அவ்விரு நூல்களிலும் பெண்மையே உயர்வு
பெற்றது. தன்கணவன் குற்றமற்றவன் என நிறுவக் கண்ணகியே போராடி வென்றாள். அதேபோல்
பசிக்கொடுமை அகற்ற மணிமேகலை அமுத சுரபியோடு மனிதநேயப் பணியாற்றினாள். சிறைக்
கோட்டத்தினை அறக்கோட்டமாக்கினாள். சீவக சிந்தாமணியில் தன்னிகரற்ற தலைவனாகச்
சீவகன் இருந்தான்.
4. மலை வளம் பாடுதல்
சிலப்பதிகாரத்தில்
சேரன் செங்குட்டுவன் மலைவளம் காணச் சென்றதும்,குன்றக் குறவர்கள் மலையில்
விளைந்த பரிசுப் பொருட்களைப் பரிசாகத் தந்ததையும் இளங்கோவடிகள்
குறிப்பிடுகிறார்.
மணிமேகலையில்,
வஞ்சியில் உள்ள யானைக் கூட்டம் மலைநாடு போன்ற தோற்றத்தைத் தருகிறது என்று
சாத்தனார் பாடுகிறாரே தவிர விரிவான வருணனைப் பகுதி(மலை பற்றியது) அமையவில்லை.
குறிஞ்சி நிலம் கடந்தது என்ற
பகுதியில் பெருங்கதை மலை வருணனை தருகிறது.
5.
கடல் பற்றிய செய்திகள்
சிலப்பதிகாரத்தின் கடலாடு காதை கடல் பற்றிய அதிகமான
செய்திகளைத் தருகிறது.
மணிமேகலையில்,
மணிபல்லவத் தீவினைக் கூறும்போது கடலால் சூழப்பட்ட தீவு எனச் சாத்தனார் கூறுகின்றார்.
பெருங்கதையில்
கடல் பற்றிய செய்திகள் ஏதுமில்லை.
6,7. நாடு,
வளநகர் பற்றிய செய்திகள்
நாட்டுப் படலம், நகரப் படலம் ஆகியன
பிற்கால இலக்கியங்களில பாயிரத்தையடுத்து இடம் பெறத் தொடங்கின.
சிலப்பதிகாரத்தில்
நாடுகாண் காதை, ஊர்காண் காதை முதலியவற்றில் நாடு, வள நகர் பற்றிய வருணனைகள்
அதிகம் இடம் பெற்றுள்ளன.
மூன்று நாடுகளை ஒன்றாக இளங்கோ
கண்டதால் மூன்று நாடுகள், மூன்று நகரங்களை அழகாக விவரித்துள்ளார்
மணிமேகலைக்
காப்பியத்தில் புகார், மதுரை,வஞ்சி, கச்சி ஆகிய நான்கு நகரச் சிறப்புகள்
விளக்கப்பட்டுள்ளன.
பெருங்கதைக்
காப்பியம் மகத நாட்டினையும் அதன் தலைநகராகிய இராசகிரியத்தையும் வருணிக்கிறது.
சீவக சிந்தாமணியில்
ஏமாங்கத நாட்டின் வளம், மழை வளம், பயிர் வளம் ஆகியன நாமகள் இலம்பகத்தில்
48 பாடல்களாய் அமைந்துள்ளன. தலைநகர் இராசமாபுரம்,
அரசர்வீதி, நகரச் செய்திகள் ஆகியன 63 பாடல்களாய்
அமைந்துள்ளன.
7,8.
பருவம் பற்றிய செய்திகள்
பருவ வருணனை காப்பியத்தின் முக்கியக் கூறாக அமைகிறது.
சிலப்பதிகார
வேனிற் காதை பருவத்தைப் போற்றுகிறது.
மணிமேகலைக்
காப்பியத்தில் பருவச் சிறப்புகள் இடம் பெறவில்லை.
பெருங்கதைக் காப்பியத்தில் பருவச் சிறப்பு
கூறப்பட்டாலும் சிறப்புப் பெறவில்லை.
9. இருசுடர்த்
தோற்றம்
சூரிய சந்திரர்களின் தோற்றத்தையும்
மறைவையுமே இரு சுடர்த் தோற்றம் என்கிறோம்.
உலகம் ஒளிபெறுமாறு உச்சியில்
தோன்றிய சூரியன் கதிர் பரப்பியதையும்,அந்தி வானத்தில் வெண்பிறை தோன்றியதையும்,
சிலப்பதிகாரம் விளக்குகிறது.
10. நன்மணம்
புணர்தல் (திருமணம் புரிதல்)
சிலப்பதிகாரத்தில் - கண்ணகி கோவலன்
மணம் சீவகசிந்தாமணியில - சீவகன் எண்மரை மணத்தல் பெருங்கதையில் - உதயணன் மணம்
நான்கு
உதயணன் மகன் மணம் மூன்று
யூகி முதலியோர் மணம்
11. பொன்முடி கவித்தல்
பெருங்கதையில்
மட்டும் இது உண்டு.