பாடம் - 4

D04124 காப்பிய வகைமையும் புதிய போக்கும்


இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

     தண்டியாசிரியர் கூறிய காப்பிய இலக்கியம் பற்றி
விளக்குகிறது. காலப்போக்கில் காப்பியம் பல மாறுதல்களுக்கு
இடம் தந்தது என்பதை இந்தப் பாடம் சொல்கிறது. காப்பிய
வகைமை இன்றைய சூழலில் படிப்படியாக எவ்வாறு புதிய
போக்கில் செல்கிறது என்பதை விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?


· புதிய காப்பிய வகைமை எவ்வாறு அறிஞர்களால்
    உருவாக்கப்பட்டது என அறியலாம்.

· எவையெல்லாம் புதிய காப்பிய வகைமை என அறியலாம்.

· எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் காப்பிய வகைமைப்
பட்டியல் எது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

· மொழிபெயர்ப்புக் காப்பியம், கதைப் பாடல், நாடகக்
காப்பியம், நவீன இரட்டைக் காப்பியம் ஆகியவற்றை
இனம் காணலாம்.

பாட அமைப்பு