6.1 சிற்றிலக்கிய வகைமை சிற்றிலக்கியத்
தோற்றம் நான்கு வழிகளில் அமைகிறது
என, டாக்டர் தமிழண்ணல் குறிப்பிடுகிறார்.
“அகத்திணை,துறை ஆகியவற்றைச் சார்ந்தெழுந்தவை
பல. கோவை, மடல், கைக்கிளை, தூது என்றாற்
போல்வன.
புறத்திணை, துறை சார்ந்தனவும் பல.
காஞ்சி, மாலை,
கையறுநிலை, ஆற்றுப்படை, திருப்பள்ளியெழுச்சி என்றாற்
போல்வன.
பத்திமையடிப்படையில் அந்தாதிகளாகவும்,
மாலைகளாகவும் கிளைத்த பாசுரங்கள் மிகப் பலவாகும்
கும்மி, பள்ளு, சிந்து
என்றாற் போல்வன நாட்டுப்புறப்
பாடலடிப்படையில் என்று என்று,
சிற்றிலக்கியம்
வகைமையாய் வளர்ந்த சூழ்நிலையைக்
காட்டுகிறார்
தமிழண்ணல்.
பத்துப் பத்தாகப்
சான்றாக :
பத்து, பதிகம், ஒருபா
ஒருபஃது, இருபா இருபஃது,
தசாங்கம் போன்றன. |