1. கதகளி பயிற்சி முறையை விவரி.

    கதகளி குருகுல முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இக்கலையைப் பத்து அல்லது பன்னிரண்டு வயதில் கற்பிக்கத் தொடங்குவார்கள். பயிற்சி விடியற்காலையில் தொடங்கும். தினமும் உடலில் மருத்துவ எண்ணெய் தடவி உடற்பயிற்சி செய்வதால் உடல் எளிமையாக வளைந்து அழகாக அபிநயம் செய்ய முடிகிறது. புருவம், கண், கன்னம், உதடு, தலை, கழுத்துப் போன்றவற்றிற்குத் தனித்தனியாகப் பயிற்சி அளிக்கப்படுகின்றது. கண்ணுக்கு மட்டும் சிறப்பாகப் பயிற்சி அளிக்கப்படும். இவர்களுக்கு மலையாளம், தமிழ், சமற்கிருதம் போன்ற மொழிகளிலும், புராணம் பற்றிய அறிவிலும் பயிற்சி இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் முதல்நாள் சொல்லிக் கொடுத்த பயிற்சியைச்     சிறப்பாகச்     செய்தபிறகு மற்றவை கற்பிக்கப்படும். இரண்டாம் ஆண்டில் சூலி ஆட்டப் பயிற்சி கற்றுக் கொடுக்கப்படும். இதன் நுணுக்கத்தை அறிந்து கொள்ளக் குறைந்தது ஆறு வருடம் ஆகும். இப்பயிற்சிக் காலத்திலே அரங்கில் சிறிய பாத்திரம் ஏற்று நடிப்பர். இவர்களின் பயிற்சி குருவுக்கு மனநிறைவு அளித்த பிறகுதான் முக்கிய கதாபாத்திரம் ஏற்க அனுமதிப்பார்.