பாலகோபால
தரங்கம் குச்சுப்புடியில் மிகவும்
பிரபலமான தரங்கமாகும். பாலகோபால தரங்கம் என்பது
கிருஷ்ணனின் சிறுவயது லீலைகளை
விளக்கும்
பாடலாகும். பாலகோபால தரங்கம் ஆடுகையில் ஒரு
தாம்பளத்தின் விளிம்பில் நின்று கொண்டு, ஒரு செம்பில்
நீரை நிரப்பி அதைத் தலையில் தாங்கிக் கொண்டு, பல
தாளங்களில் தங்களின் ஆடல்
திறமையை
வெளிப்படுத்துவர்.