1. பாகவத மேளக் கட்டுக்கோப்பினை விவரிக்க.

    பாகவத மேள நாட்டிய நாடகம் கோணங்கி வருகையுடன் தொடங்குகிறது. இவர் பாடலுக்கேற்றவாறு சில அடவுகளைச் செய்து பார்வையாளர்கள் நகைக்கும் வண்ணம் செய்தபின், பார்வையாளர்களைப் பார்த்து சாது சாது அதாவது அமைதியாக நாடகத்தைக் கண்டு களிக்குமாறு வேண்டிய பிறகு மேடையை விட்டு அகல்வார். இதன் பிறகு நாடகத்தில் பங்கேற்கும் இசைக்கலைஞர்களும் பக்கவாத்தியக் கலைஞர்களும் மேடையில் ஒருங்கே தோன்றி வழிபாட்டுத் தொடக்கப் பாடலான தோடய மங்கலத்தை இசைக்கின்றனர். அதன் பிறகு அனைவரும் பிரகலாத பட்டாபிஷேகம் பாடல்களைப் பாடுகின்றனர். இது பல சொற்கட்டுகளால் அலங்கரிக்கப்படுகிறது. இந்தப் பாடல் முடிந்ததும் ஊர்ப்பெரியவர்     ஒருவர்     மேடையில் தோன்றி இப்பாகவதர்களுக்குச் சந்தனமும் மலர்களும் நல்குவார். இவை போன்ற தொடக்க நடைமுறைகள் அனைத்து நாடகங்களுக்கு முன்பும் நடைபெறுவதில்லை. பிரகலாத நாடகத்தில் மட்டும் காணப்படுகிறது.